அவர்கள் கண்கள் திறக்கப்பட்டபோது அவர்கள் அவரைக் கண்டு கொண்டனர் Tampa, Florida, USA 64-0416 1இப்பொழுது பரிசுத்த லூக்கா எழுதின் சவிசேஷம் 24-ஆம் அதிகாரம் 13-ஆம் வசனம் தொடங்கி வாசிப்போம். அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள். நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறாரென்று சொன்ன தேவதூரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள், அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டின் பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு ... 2இப்பொழுது ஜெபத்தில் நமது தலைகளை வணங்கி நாம் ஜெபிப்போம். மகா பரிசுத்தமுள்ள தேவனே, உமது குமாரன் இயேசுவின் நாமத்தில் நாங்கள் உம்மை அணுகுகிறோம். மேலும் எங்களுக்காகவும், எங்களின் சார்பாகப் பேசுகின்ற அவருடைய இரத்தம் இருக்கிற உம்முடைய மகத்தான பலிபீடத்திற்கு விசுவாசத்தோடு வருகையில் நாங்கள் உம்முடைய பிரசன்னத்தில் இப்பொழுது இருக்கிறோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். மேலும், நாங்கள் மெய்யாகவே ஒரு தேவையுள்ள ஜனங்களாக இருக்கிறோம். கர்த்தாவே, எங்களுக்கு நீர் தேவையாய் இருக்கிறீர். நாங்கள்-நாங்கள் உம்முடைய கிருபைக்காக கேட்கிறோம். இன்றைக்கு தீர்க்கதரி சனங்கள் நிறைவேறியிருக்கிறதை நாங்கள் பார்க்கிறது போலவே அந்த - அந்த சபையானது எவ்வளவாக தாங்கள் உலகக் காரியங்களினாலே ஐஸ்வர்யம் அடைந்திருக்கிறோம், எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர், 'நீ நிர்வாணியாய், குருடனாய், பரிதபிக்கப்படத்தக்க வனாய், குருடனாய் இருந்தும் இதை அறியாமலிருக்கிறாய்“ என்பதாய் அவர் கூறுகிறார். பிதாவே, நாங்கள் கிருபைக்காக கேட்கிறோம். பின்பு, நாங்கள் ஜீவிக்கிறதான நேரத்தை நாங்கள் அறிந்து கொள்ளவும், நாங்கள் உண்மையாக விசுவாசிப்பதைப்போலவே அது சமீபமாக இருக்கிறபடியால், அவருடைய தரிசனமாகு தலுக்காக நாங்கள் எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும், உமது வார்த்தையைப் புரிந்துகொள்ள எங்கள் கண்களைத் திறந்தருளும். ஆகவே இப்பொழுதும், இன்றிரவு எங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை உம்முடைய மகிமையின் ஐசுவர்யத்தின்படியே நீர் எங்களுக்குத் தரும்படி நாங்கள் கேட்கிறோம். கர்த்தாவே, எங்கள் பாவங்களை மன்னியும். எங்கள் தவறான புரிந்து கொள்ளுதல்களையும், எங்கள் - எங்கள் காரியங்களை அறியவேண்டிய விதமாய் நாங்கள் அறியாமைக்காகவும் அதைக் கண்ணுராமல் இருக்கிற எங்களை மன்னித்த ருளும் என்று நாங்கள் - நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, நாங்கள் மனிதர்கள் என்பதையும், எல்லாவிதமான தவறுகள், தப்பிதங்களுக்கு ஆளாக வேண்டியவர்கள் என்பதையும் நினைத்தருளும். நீரோ முடிவில்லாதவரும், தவறாதவரும், நித்திய தேவனுமாயிருக் கிறீர். எங்கள் மேல் இரக்கமாய் இருந்து, நாங்கள் கேட்கும் ஆசிர்வாதங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 3இப்பொழுது, இன்றிரவிலே மறுபடியுமாக இந்த... இந்த அரங்கத்திற்குள்ளாக வந்து, தேவனுடைய காரியங்களைச் சுற்றிலும் ஐக்கியங் கொள்ளத்தக்கதாக எங்களுக்குக் கிடைத்த இந்த மாபெரும் சிலாக்கியத்திற்காக மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். ஒவ்வொரு மாலையும் ஒன்பது மணியிலிருந்து ஒன்பதரை மணிக்குள்ளாக உங்களை விட்டுவிடுவதாக நான் கொடுத்த வாக்கிலிருந்து கடந்த இரவு நான் தவறி விட்டு அதிக நேரம் உங்களைப் பிடித்து வைத்ததற்காக உங்களிடம் மன்னிப்பைக் கோருகிறேன். மேலும் நான் - நான் - நான் கடந்த இரவு அதில் தவறிவிட்டேன். நான் - நான் அப்படி செய்ததற்கு வருந்துகிறேன். இப்பொழுது, இன்றிரவு, அதை உங்களுக்கு மீட்டுத்தர முயற்சிப்பேன். ஏனென்றால் உங்களில் அனேகர் வேலை செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும் நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். நீங்கள், ஜனங்களாகிய நீங்கள், ஸ்திரீகளாகிய நீங்கள் உங்கள் கணவன்மார்களை வேலைக்கும் மற்ற காரியங்களுக்கும் அனுப்பவேண்டும். நீங்களும் சிலர் வேலை செய்கிறீர்கள். அதுவும் கடினம்தான். மேலும், இன்று அதிகமான பிரசங்கங்களை உடையவர்களாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அநேக அருமையான ஊழியக்காரர்கள், திறமையான ஊழியக் காரர்கள், நமக்கு வார்த்தையைக் கொண்டு வந்தனர். உங்கள் மேய்ப்பர்கள், மேலும் சுவிஷேகர்கள் நகரத்தினூடாக வருகிற மற்றவர்கள் உண்டு. ஆனால், நான் செய்ய விரும்புகிற-உங்களுக்குக் கொண்டுவர விரும்புகிற முக்கிய காரியம் என்னவென்றால், அந்த அந்த கிறிஸ்துவின் தத்ரூபமான பிரசன்னம், அதாவது-அதாவது நீங்கள் அவரைப் பார்த்து, இந்த நாளுக்கென்றுள்ள அவருடைய வாக்குத்தத்தத்தை அடையாளம் காண்பதன் மூலம், அது அவரே என்று உங்களை அறிந்துகொள்ள செய்வதுதான் என நான் நினைக்கிறேன். 4இப்பொழுது, நேற்றிரவு ஒரு மேலோட்டமான சிறு காரியத்தைக் கொடுக்க முயன்றோம். இன்றிரவும் வேறொரு சிறு மேலோட்டமான காரியம், மேலும் ஒருவேளை நாளை இரவும் கொடுக்க முயல்கிறோம். அதன்பிறகு, கர்த்தருக்குச் சித்தமானால், சனிக்கிழமை இரவு, ஏனென்றால் அப்பொழுதுதான் ஞாயிறு அன்று நீங்கள் மிக அதிகாலையில் எழுந்திருக்க வேண்டியிருக்காது. நான் - நான் அந்த செய்தியை மேய்ப்பர்களும் மற்றவர்களும் அதிக புரிந்துகொள்ளுதலோடு ஒருவிதமாக கொண்டு வந்து அதை வேதவசனங்களின் பின்னணியில் வைப்பதற்கு முயற்சி செய்ய விரும்புகிறேன். அதற்கும் பிறகு, ஞாயிறு பிற்பகலில், நாம் - நாம் ஒரு, ஒரு ஜெபவரிசையை, வியாதிஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படியாக, வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைத்து அவ்விதமாக ஜெபிக்கவேண்டுமென்று விரும்புகிறோம். மேலும் அது வெற்றிகரமாக இருந்ததென்றும் கண்டோம். அதாவது விசுவாசத்தில் அந்த நிலையை எட்டமுடியாதவர்கள், வெறுமனே அவரை விசுவாசித்து அதை ஏற்றுக் கொள்ளலாம். நான் என்ன நினைக்கிறேனென்றால், நாம் எழுந்து நின்று அவரை ஏற்றுகொண்டால் அது நன்றாயிருக்கும். 5இங்கே தென்ஆப்பிரிக்காவில், டர்பன் என்கிற இடத்தில் நான் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஜனங்கள், அந்த டர்பன் பந்தய மைதானத்தில் கூடியிருந்தனர் என்று நான் விசுவாசிக்கிறேன். அங்கே, நாங்கள் கொண்டு வந்து..... வெறுமனே ஐந்து பேரை மாத்திரமே மேடைமேல் கொண்டு வந்தனர். அந்த ஐந்தாவது நபர் மேடையின் மேல் சுகமடைந்தபோது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆங்காங்கே படுத்துக்கிடந்த அந்த உள்ளூர்வாசி களிடம் கேட்கப்பட்டது.... ஓ, என்னே ! நல்லது, உலகிலுள்ள பந்தய மைதானங்களிலேயே மிகப்பெரியது அது. அது லூயிவில்லியிலுள்ள “சர்ச்சில் டவுன்ஸ்” ஐ விட மிகப்பெரியது. ஆங்கிலேயர்கள் யாவரும் தங்கள் குளிர்கால விளையாட்டுகள் மற்றும் பந்தயங்களுக்காக அங்கே சென்றுவிடுகிறார்கள். அது வழியெல்லாம் நிரம்பியும், மைதானம் முழுவதுமாக நிரம்பியுமிருந்தது. நான் இன்னொரு பக்கம் எங்கோ ஒரு - ஒரு கட்டிடத்திற்குள் இருந்தேன். டர்பன் நகர மேயர், “சிட்னி ஸ்மித்”தான் அன்று என்னை அந்தக் கூட்டத்திற்கு அந்த மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். 6மேலும் ஒரு சபை சம்பந்தமான ஜெபத்தை நான் கண்டேன். பிறகு அந்த உள்ளூர்வாசிகள் அவர்களில் சிலருக்கு வலதுகை எது இடதுகை எது என்று கூட தெரியவில்லை. நான் அவர்களைப் பார்த்தேன், அவர்கள் பார்த்த பிறகு... நான் விளக்கிக் கூறினேன். எனக்கு பதினைந்து வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர் கள் இருந்தனர். நீங்கள் ஒருவாக்கியத்தை கூறியபிறகு, அந்த பதினைந்து வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களும் அதைச் சொல்லி முடிக்கும் வரைக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டும். இப்பொழுது, அந்த பழங்குடிகளுக்கு, அது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும். மேலும் அது முடிந்த பிறகு, இயேசு என்றால் யார் என்று ஒருசிறு அளவில் அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். நான், “இங்குள்ள உங்களில் அநேகர் கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள், இருப்பினும் உங்கள் கரத்தில் ஒரு விக்கிரகத்தை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள், என்றேன்”. நான் ஒன்றைக் கேட்டேன். நான் திரு.ஸ்மித்திடம், “இந்த உள்ளூர்வாசிகள் எதற்காக இந்த விக்கிரகங்களை சுமந்து கொண்டு இருக்கின்றனர்” என்று கேட்டேன். அவர், 'நீங்கள் சொன்னது போலதான் அதுதான் அவர்களுடைய கிறிஸ்தவ அடையாளம்“ என்று சொன்னார். 7அவர், “அதுவந்து” “அவன் ஒரு ஜூலோ ” என்றார். அவர், “எனக்கு அவனுடைய பாஷையைப் பேசமுடியும்” என்று சொன்னார். “அப்படியானால் அவனிடம் கேளுங் கள்” என்று கூறினேன். ஆகவே எனக்கு உதவியாக அவர் அதைச் செய்தார். ஆகவே நான்... நாங்கள் அவன் அருகில் சென்றோம். நான் “தாமஸ்”, என்று அவனைக் கூப்பிட்டேன். அவர், “ஏதாகிலும் அவனிடம் கேளுங்கள், ஏனென்றால் அவன்தான் ஒரு சந்தேகக்காரன் ஆயிற்றே” என்றார். நான் அவனிடம், “தாமஸ் நீ ஒரு கிறிஸ்தவனா” என்று கேட்டேன், அவன் “ஆம்” என்றான், அவன் அதை விசுவாசித்தான். நல்லது, உன் கையில் இருக்கும் அந்த விக்கிரகத்தை நீ எதற்காக வைத்திருக்கிறாய்? என்று நான் கூறினேன். நல்லது, அது. அதுவும் கடவுள்தான். அவனுடைய தந்தையை சிங்கம் விரட்டிய போது, அவர் இந்த விக்கிரகத்தைத்தான் உடன் வைத்திருந்தாராம். அவர் அதன் மேல் கொஞ்சம் இரத்தம் தெளித்து, கொஞ்சம் நெருப்பைப் பற்ற வைத்து, மந்திரவாதி சொல்லிக்கொடுத்த ஒரு சிறிய மந்திரத்தைச் சொன்ன போது, அது அந்த சிங்கத்தை பயமுறுத்தி விரட்டிவிட்டதாம். நல்லது, நான், நானும் ஒரு “ஜாக்டர், ஜாக்டர் என்றால் ”ஒரு வேட்டைக்காரன்“ என்று அர்த்தம். லீயூ, லீயூ ஜாக்டர், அதாவது ”சிங்கங்களை வேட்டையாடுபவன்“ என்று. நான் சொன்னேன், ”நானும் சிங்கங்களை வேட்டையாடுபவன்தான். அந்த சிங்கங்களை பயமுறுத்தி விரட்டிவிட்டது அந்த மந்திரமல்ல. ஆனால் அந்த நெருப்புதான்- நெருப்பு என்றால் சிங்கத்திற்கு பயம்“ என்றேன். அவன் “நல்லது”, அவன் “அமோயாவை” விசுவாசித்தான், “அமோயா” என்றால் “காணக்கூடாத சக்தி” என்று பொருள். தேவனைப்போல, அல்லது காற்றைப்போல. பாருங்கள்? “அமோயா” நீங்கள் செய்யக் கூடிய... ஏதோவொன்று அவன் “அமோயா” வை விசுவாசித்தான். ஆனால் அந்த “அமோயா” தோற்றுப்போனால், இதுவும் முடியாது. பாருங்கள்? இப்பொழுது, அவர்களைப் பொறுத்தவரையில், அதுதான் கிறிஸ்தவத்தின் பெலம். நான் அவர்களிடம் “நான் இப்பொழுது கிறிஸ்துவைக் குறித்து மிஷனரி என்னவெல்லாம் கூறினாரோ அதெல்லாம் சரிதான். ஆனால், பாருங்கள்?” என்றேன். “நான் அங்கே என்னவென்றால், அவர் எல்லாவற்றையும் உங்களுக்குக் கூற வில்லை”. அவர் உங்களுக்குச் சொல்ல முயற்சித்தது என்னவென்றால், “அவருடைய மகத்தான வல்லமையெல்லாம் அங்கே அவர் சிலுவையில் மரித்தவுடன் நின்று போயின, இனிமேல் அது நம்மிடம் இல்லை ” என்பதாகச் சொல்லியிருந்தார். அங்கேதான் அவர் தவறாகப் புரிந்துகொண்டார். அவர், சரியாக நம்மத்தியில், பாருங்கள், அவர் எப்பொழுதும் இருந்த விதமாகவே உயிரோடிருக்கிறார்“. 8இவ்விதமாக அது நிரூபிக்கப்பட்டதை அவர்கள் கண்டபோது, கடந்த மாலையில் நீங்கள் பார்த்ததுபோல், ஒரே நேரத்தில் இருபத்தைந்தாயிரம் பேர் சுகமானதாக அவர்கள் கணக்கிட்டனர். அதைச் சிந்தித்துப் பாருங்கள். மேலும் அடுத்த நாள், திரு. ஸ்மித் என்னை அழைத்து, “சகோதரன் பிரன்ஹாம், உங்கள் - உங்கள் ஹோட்டல் ஜன்னலுக்குச் சென்று இந்தியப் பெருங்கடலை நோக்கி வெளியே பாருங்கள்” என அவர் கூறினார். அங்கே ஏழு மிகப்பெரிய ஆங்கிலேய வாகனங்கள் வருகின்றன. ஓ, என்னே! தங்களுக்கு அன்பானவர்களைக் காடுகளிலிருந்து தூக்கிக் கொண்டு வந்த நோயாளிகளை தூக்கிச்செல்லும் படுக்கை கள் மற்றும் கக்கதண்டங்களும் குவிக்கப்பட்டு அங்கே அப்படியே நிறைய குவியலாக இருந்தன, அவைகளைக் கொள்ளத்தக்க அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பிடிக்கக் கூடிய வண்டிகள் நம்மிடமில்லை. ஒரு நாளைக்கு முன்பு, அவர்கள் அதன் மேல் இருந்தனர். மேலும் இங்கே அவர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த வண்டிகளுக்கு தங்கள் கரங்களை உயர்த்தியவாறு “விசுவாசிப்பாய் யாவும் கை கூடிடும்” என்று பாடிக் கொண்டு நடந்து வந்தனர். இப்பொழுது, ஒரு அஞ்ஞானியாகிய மனிதனே, அதாவது வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பானேயல்லாமல் அந்த நிலைமையில் இருக்கும் ஒரு மனிதன், அது சம்பவிப்பதை ஒரே ஒரு விசை பார்த்தபோது, அல்லது வேத வசனத்தை அவனுக்கு ஒருவிசை சரியாக படித்துக் காண்பித்து விளக்கி காட்டியபோது; ஆவியால் நிரப்பப்பட்ட ஜனங்கள் என்று உரிமைகோரிக்கொள்ளுகிற நம்மைக் குறித்தென்ன? நாம் எப்படியாய் காரியங்களை செய்யவேண்டியவர்களாய் இருக்கிறோம்? பாருங்கள்? 9ஆனால், காரியம் என்னவென்றால், நாமெல்லாரும் அதிக அறிவு பெருத்தவர் களாகி ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் சொந்த கருத்தைத் தெரிவிக்கிறவர்களாய் இருக்கிறோம். நல்லது, இப்பொழுது நீங்கள் சந்திக்கிற மக்களிடத்திலுள்ள வித்தியாசம் அதுதான். உங்களுக்குத் தெரியுமா? அங்கே... அஞ்ஞானி என்று சொல்லும் போது நீங்கள் முற்றிலும் படிப்பறிவில்லாதவர்களாய் இருக்க வேண்டு மென்பதில்லை. மெத்தப்படித்த அஞ்ஞானிகள் கூட இருக்கிறார்கள், உங்களுக்குத் தெரியுமா? அவர்கள்தான் எல்லோரிலும் மோசமானவர்கள். அது, அது சரியே. நீங்கள் அதை இழுக்கப் போகும்போது ... நான் உங்களுக்குக் கூறுவேன். நான் இந்த உலகத்தில் பயணம் செய்து வருகிறேன். பலமுறை உலகை சுற்றிவந்துள்ளேன், ஆனால் உங்களுக்கு தெரியுமா? அங்குதான் இதுவரை இல்லாத அளவில் மிஷனரிகள் தேவைப்படுகிறார்கள். அமெரிக்க ஐக்கியநாடு, சரியாக இங்கேயே. இங்கேதான் மிஷனரிகளுக்கான ஊழியக்களம் உள்ளது. அதுசரியே. சரியாக அந்த வலது கைக்கும், இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத அந்த ஜனங்களில் சிலர் வந்து தேவன் என்றால் என்ன என்பதை இந்த ஜனங்களுக்குப் போதிக்கட்டும். ஆம். முழு காட்சியின் முழு காரியத்தையும் இழந்து விடுமளவுக்கு, அவர்களுக்கு அறிவு படைத்த வர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆம். அவர்கள் அதை அப்படியே விளக்கிக் காட்ட முயற்சிக்கிறார்கள். அதைக் கணக்கு போட்டுப் பார்க்கிறார்கள், அதை அதை வகையறுக்க முயற்சிக்கிறார்கள். அறியாமையுள்ளவன் எதையும் வகையறுக்க முயலமாட்டான். அவன் அப்படியே அதை விசுவாசிக்கிறான். நீங்களும் அதைத்தான் செய்யவேண்டும், தேவனுடன் சரி செய்து கொள்ள, வெறுமனே விசுவாசிக்கவேண்டும். நீங்கள் தேவனை வகையறுக்க முடியாது. 10மோசே. அவன் அந்த முட்செடி வெந்துபோகாததைக் கண்டபோது? இப்பொழுது, மோசே ஒரு வேதியியலாளனாய் இருந்தான். மேலும் மோசே எகிப்தியர்களின் எல்லா ஞானத்திலும் கற்பிக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் அந்த முட்புதரைப் பார்த்து போது, அது வினோதமாய் இருந்தது. ஆனால், அவன், “நல்லது, நான் கிட்ட போய், அந்த நெருப்பு அணைந்த பிறகு, அந்த புதரின் இலைகளை கொண்டு வந்து, ஆய்வகத்தில் வைத்து அவற்றின் மேல் என்ன தெளிக்கப்பட்டிருக்கிறது, எப்படி அந்த புதர் எரிந்தும் இந்த இலைகள் வெந்துபோகவில்லை என்று கண்டுபிடிப்பேன்” என்று கூறவில்லை. அப்படி செய்திருந்தால் அது ஒரு அறிவியல் பூர்வமான அணுகு முறையாய் இருந்திருக்கும். 11ஆனால் அவன் என்ன செய்தான்? அவன் தன் பாதரட்சைகளைக் கழற்றி விட்டுவிட்டு, மண்டியிட்டு அமர்ந்து அதனுடன் பேசினான். பதிலுக்கு தேவனும் அவனுடன் பேசினார். பாருங்கள்? அது உங்களை நீங்கள் தாழ்த்தும்போது, எனவே உங்களைத் தாழ்த்துங்கள். இப்பொழுது மார்த்தாள் இப்படிச் சொல்லியிருந்தால் எப்படி?... இயேசு வருகிறார் என்று அவள் கேள்விப்பட்டபோது, லாசருவுக்காக ஜெபிக்க வரும்படி அவர்கள் அவரை அழைத்தனுப்பின்போது, அவன் மரித்து நாலு நாளாயிற்று. அவள் ஓடிச்சென்று, “நாங்கள் எதையோ விசுவாசிப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந் தேன்” என்று கூறியிருந்தால். உங்களுக்குத் தெரியுமா? அவளுக்கு அவரைத் திட்டு வதற்கு உரிமையிருந்தது, ஏனென்றால் அவர்கள் அவரை அழைத்தனுப்பின் போது அவர் வரத்தவறி விட்டார். ஆனால், நீங்கள் பாருங்கள், அவள் சரியான அணுகுமுறையைக் கொண்டிருந்தாள். அவள் அவரிடம் சென்று, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். இப்பொழுதும் நீர், தேவனிடத்தில் வேண்டிக் கொள்வதெதுவோ, தேவன் அதைத் தந்தருள்வார்” என்றாள். ஓ! என்னே? அதுதான் அது. அதுதான் அந்தக் கருத்து. பாருங்கள்? அவள் சரியான அணுகுமுறையைக் கொண்டிருந்தாள். அந்த விசுவாசத்தைப் பாருங்கள், அது இயேசுவைத் தாக்கியபோது, அவர், “உன் சகோதரன் மறுபடியும் எழுந்திருப்பான்” என்று சொன்னார். அவள், “ஆம், ஆண்டவரே, கடைசி நாளில், பொதுவான உயிர்த்தெழுதலில், அவன் எழுந்திருப்பான். அவன் ரொம்ப நல்ல பையனாய் இருந்தான்” என்று சொன்னாள். அவரோ, “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவன் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா?” என்றார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரனாகிய மேசியா என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். ஓ, என்னே! அவர், “அவனை எங்கே அடக்கம் பண்ணினீர்கள்?” என்றார். 12சமீபத்தில் நான் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் இதைக் கூறினேன், மறுபடியும் என் நிலையைத் தெரிவித்தேன். அது ஒரு கூட்டம் ஜனங்கள், அவர்கள் தெய்வீக சுகத்தை விசுவாசிப்பதாக கூறிக்கொள்வர்; அவர்கள் வெறுமனே சரீரப்பிரகாரமாக அல்லது மூளை அறிவில் விசுவாசிப்பவர்கள், மூளை அறிவில், “காரியங்களை மனதில் வைத்து சிந்திப்பவர்கள்”. இயேசுவை தெய்வீகமானவராக அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள். மேலும் அவர்கள், அவரை ஒரு நல்ல மனிதன், அவர் நல்ல ஒரு உபாத்தியாயராகவும், தத்துவவாதியாகவும் இருந்தார். ஆனால் அவர் “தெய்வீகமானவராக” இருக்க முடியாது என்று கூறுபவர்கள், என்று கூறினேன். நான், “அவர் ஒரு தெய்வீகமானவராக இல்லையென்றால், இதுவரை இந்த உலகத்தில் இருந்தவர்களிலேயே மிக மோசமான ஏமாற்றுக்காரராய் இவர் இருந்திருப் பார்” என்றேன். ஆம், ஐயா. நீங்கள் அவர் “தெய்வீகமானவர்” என்பதைத் தவிர வேறொன்றாகவும் அவரை இருக்கச் செய்ய முடியாது“ என்று கூறினேன். “அவர் தெய்வீகமானவர் இல்லை என்று உங்கள் சொந்த வேதாகமத்தைக் கொண்டு நான் நிரூபித்துவிட்டால் அப்பொழுது ஒத்துக்கொள்வீர்களா?' என்று அவள் கேட்டாள். “நான் சொன்னேன், ”நான் வாசிக்கிற இந்த வேதாகமத்தைக் கொண்டு உன்னால் அதை நிரூபிக்க முடியாது“ என்று நான் கூறினேன். அவள், “நல்லது, நான் அதை உங்களுக்கு காண்பிக்கிறேன்” என்று சொன்னாள். நான் “சரி” என்றேன். அவள், “பரிசுத்த யோவான் 11-ஆம் அதிகாரத்தில் வேதம் கூறுகிறது, இயேசு லாசருவின் கல்லறையண்டையில் சென்றபோது, அவர் அழுதார்” என்று சொன்னாள். நான், “நிச்சயமாக” என்றேன். அவள், “தெய்வீகமானவராய் இருந்துகொண்டு அவர் எப்படி அழமுடியும்?” என்று கேட்டாள். நான், “நல்லது, அவர் என்னவாய் இருக்கிறார் என்பதை நீ பார்க்கத் தவறிவிட்டாய். அவர் கல்லறைக்குச் சென்று அழுதபோது அவர் மனிதனாய் இருந்தார். ஆனால் அவரே தன்னுடைய சிறிய தோள்களைக் குலுக்கி ”லாசருவே, வெளியே வா“ என்றபோது, மரித்து நான்கு நாளான பிறகு அந்த மனிதன் கல்லறையை விட்டு வெளியே வந்தானே, அது ஒரு மனிதனைக்காட்டிலும் மேலானது. அது ஒரு மனிதனுக்குள் இருந்த தேவன்.” பாருங்கள்? என்றேன் அது சரி. 13அவர் மலையை விட்டு இறங்கி வந்தபோது, ஒரு மனிதனாய் இருந்தார், அவர் பசியாயிருந்தார். ஆகாரத்திற்காக மரத்தைப் பார்த்தார். அதில் ஆகாரம் ஏதும் இல்லாததால் அவர் அந்த மரத்தை சபித்தார். அவர் பசியாயிருந்தபோது, அவர் ஒரு மனிதனாய் இருந்தார். ஆனால் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து அதைக்கொண்டு ஐந்தாயிரம் பேர்களை போஷித்து, மீதியானதை ஏழு கூடைகள் நிறைய எடுத்தபோது, அது ஒரு மனிதனைக்காட்டிலும் மேலானதாய் இருந்தது. அது மனிதனுக்குள் இருந்த தேவன். மேலும் தேவன் தம்மை மனிதனுக் குள் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் மனிதனை தெரிந்துகொள்கிறார். நாள் முழுவதும் பிரசங்கம் செய்தும், பகுத்தறிந்தும் இன்னும் மற்றக் காரியங்களும் ஜனங்கள் அவரைப் பின்பாக இழுத்துக்கொண்டும் இருந்தனர். அங்கே, அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டது. அந்த இரவில் அங்கே அந்த படகில் அவர் படுத்துக் கொண்டிருந்த போது, கடலில் புயல் வந்து, பத்தாயிரம் பிசாசுகள் அவைகள் அவரை மூழ்கடித்துவிடுவதாக சூளுரைத்தன என நான் ஊகிக்கிறேன். அந்த இரவில் அவர் அங்கே பின்புறத்தில் படுத்திருந்தார், படகின் பின்புறத்தில் அவர் நித்திரையாய் இருந்தார். அந்த பலத்த கடல் கொந்தளிப்பின் நடுவில் அவர்கள் ஒரு அடைப்பான் போல அவர்கள் அலைபட்டுக்கொண்டிருந்தனர். அவர் களைப்புற்று, அங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது, அவர் ஒரு மனிதனாய் இருந்தார். அது சரியே.ஆனால் அவர் ஒருவிசை எழும்பி, படகின் விளிம்பில் ஒரு காலை வைத்துப் பார்த்து, “இரையாதே, அமைதலாயிரு”, என்று சொன்னபோது அது ஒரு மனிதனைக்காட்டிலும் மேலானதாய் அங்கே இருந்தது. ஆம். அது ஒரு மனிதனுக்குள் இருந்த தேவன். 14அவர் அங்கே அந்த சிலுவையில் இரக்கத்துக்காக கெஞ்சி, அங்கே மரித்தபோது, அவர் ஒரு மனிதன். அவர் ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் அவரே அந்த மரணம், நரகம், கல்லறை, ஆகியவைகளின் முத்திரையை உடைத்து மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தபோது, அவர்தாம் ஒரு மனிதனைக்காட்டிலும் மேலானவர் என்று நிரூபித்தார். அது ஒரு மனிதனுக்குள் இருந்த தேவன். இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை , எந்த ஒன்றையும் மதிக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் அதை விசுவாசித்தான். எந்த ஒன்றையும் மதிக்கத் தெரிந்த ஒவ்வொரு புலவனும் மற்றும் ஒவ்வொருவரும் அதை விசுவாசித்தனர். அதுசரியே. அவர் ஒரு மனிதனைக்காட்டிலும் மேலானவர், அவர் தேவனாயிருந்தார். இப்பொழுது, தேவன் தம்முடைய சொந்த குமாரனுக்குள், ஒரு சரீரத்தைக் கட்டி அதில், அவர் ஜீவித்து வாசம் செய்து, உதவியற்ற ஒரு நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டார். சற்று சிந்தித்துப் பாருங்கள். யேகோவா ஒரு சிறு மழலையாக, மாட்டுக் கொட்டகையில், ஒரு சாணக்குவியலின் மேல் அழுதுகொண்டு இருந்தார். அந்த சிறு மழலையின் கரங்கள், சிறு யேகோவா கீழே இறங்கி அந்த வடிவத்தில் தம்மைத் திரையிட்டுக் கொண்டார். ஒரு வாலிபனாக யேகோவா வெளியில் விளையாடுவதைப் பாருங்கள். யேகோவா தச்சுப்பட்டறையில் வேலை செய்வதைப் பாருங்கள். யேகோவா சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். பின்பு, அவர் உயிரோடு எழுந்த போது அவர்தானே யெகோவா என்பதை நிரூபித்துக் காட்டினார். அதுசரியே. தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார். அவர் ஒரு தத்துவ ஞானியைப் பார்க்கிலும் மேலானவர். அவர் ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேலானவர். அவர் இம்மானுவேல். 15இப்பொழுது, இன்றிரவு, ஒரு பொருளை நாம் இங்கு அணுகப்போகிறோம். நல்லது, இப்பொழுதுதான் வேதவசனத்தை வாசித்தோம். இப்பொழுது “அவர்கள் கண்கள் திறக்கப்பட்டபோது, அவர்கள் அவரை அறிந்து கொண்டனர்” என்கிற தலைப்பை ஒரு பொருளுக்காக எடுத்துக் கொள்ளப்போகிறோம். இப்பொழுது நம்முடைய காட்சி அழகான வேளையில் ஆரம்பிக்கிறது, அல்லது அது சரியாக வருடத்தின் இந்த வேளையில், ஆயத்தமாகிறது. அது ஒரு-ஒரு ஈஸ்டர் அன்று. அதுதான் முதல் அருமையான ஈஸ்டராக இருந்தது. இயேசு அந்த இளவேனிற் காலத்தின், ஈஸ்டர் நாளன்று, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து மக்கள் மத்தியில் மறுபடியும் ஜீவித்துக்கொண்டிருந்தார். அவரை நேசித்த அநேகர் அதை அறியவில்லை . இன்றைக்கும் காரியமானது அதே விதமாகத்தான் இருக்கிறது. இன்றைக்கு அவரை நேசிக்கிறவர்கள் அநேகர் இருக்கின்றனர், அவர்கள் அவர் இன்றைக்கு நம் மத்தியில் இருக்கிறார் என்பதை மெய்யாகவே நம்ப முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் அதை அப்படியே நம்பமுடியாதவர்கள் போல் இருக்கின்றனர். அவர்கள், ஆம், அவர்களில் அநேகர் அந்நாளிலே, அவரோடு நடந்தவர்கள், பேசினவர்கள் அவர் மரித்தோரிலிருந்து திரும்பி வந்தார் என்பதை கிரகிக்கக்கூடாமல் இருந்தனர், அவருடைய கல்லறையண்டை சென்று, அவர் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டார் என்பதை அறிந்து கொண்ட சாட்சிகள் அவர்களிடத்தில் இருந்தார்கள், இருப்பினும் இன்னுமாக அவர்களால் அதை நம்பக் கூடாதிருந்தது. ஏன்? அது ஏன் என்று நான் வியக்கிறேன். பாருங்கள், அது சற்றே வழக்கத்துக்கு மாறானது. பாருங்கள்? அங்கே.. அது மிகவும் வழக்கத்துக்கு மாறானது. அது எப்பொழுதுமே, தேவன் வழக்கத்துக்கு மாறானவைகளில் இருப்பதே வழக்கமாக இருக்கிறது. வழக்கத்துக்கு மாறானவைகளே அவரை தேவனாக்குகிறது. பாருங்கள்? அதுதான் அவரை அவர் என்னவாக இருக்கிறாரோ அப்படியாக இருக்க வைக்கிறது. அவர் எப்பொழுதும் வழக்கத்துக்கு மாறானவைகளையே செய்கிறார். 16இப்பொழுது மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்த அவனுடைய சிறிய இனிய இதயமான மரியாளை; அந்த பிறப்பிற்கு முன்னமே யோசேப்பு கண்டபோது அது வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. திருமணமாகாமலேயே அவள் தாயகப்போவதை அவன் கண்டான். அவள் உண்மையாகவே காபிரியேல் தூதன் தன்னை வந்து சந்தித்ததை யோசேப்பிடம் கூறியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. யோசேப்பு ஒரு நீதிமானாயிருந்தான். அவன் ஒரு நல்ல மனிதன்.மேலும் அவன்-அவன், அவனும் கூட அவளை நம்ப விரும்பினான். என்னால் அதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவன் அந்த வாலிப எபிரேயப் பெண்ணை தன் முழு இருதயத்தோடும் நேசித்து அவளுடைய அழகிய கண்களினூடாக, நோக்கிப்பார்த்த போது அவள் சொல்லியிருப் பாள். “அருமை யோசேப்பு அவர்களே, அந்த மகத்தான காபிரியேல் தூதன்தான் என்னை வந்து சந்தித்து, ”பரிசுத்த ஆவியினால் நிழலிடப்படுவேன் என்றும், எனக்குள் பிறப்பது பரிசுத்தமானதாக இருக்கும், என்னிடத்திலிருந்து வருபவர், தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார்“ என்று கூறினார் என்றாள். இப்பொழுது, அவன் அதை நம்ப விரும்பினான். ஆனால் இதுபோன்ற ஒன்று இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கவில்லை , ஆகவே அது மிகவும் அதிகமான ஒரு வழக்கத்துக்கு மாறானதாய் இருந்தது. மேலும், பாருங்கள், அவன் ஒரு நீதிமானா யிருந்தான், ஒரு நல்ல மனிதன். மேலும், அவ்விதம் நடக்கும் என்று வேதமும் சாட்சியுரைத்துக்கொண்டிருந்தது. அதாவது “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்று உரைத்தது. அவனுக்கோ அது புரியவில்லை . பாருங்கள்? அதைக்குறித்த வேதவசனம் கிறிஸ்து இவ்விதமாகத்தான் பிறப்பார் என்று சொன்னது, இன்னுமாக, யோசேப்பால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் அது மிகவும் வழக்கத்துக்கு மாறான ஒன்றாய் இருந்தது. 17இப்பொழுது அவர்களுடைய நாட்களில், அவர்களுக்குத் தீர்க்கதரிசிகள் இல்லை . அந்த மனிதன்... அவர்களுக்கு நூற்றுக்கணக்கான வருடங்களாக தீர்க்கதரிசிகளே இல்லை. ஆகவே தேவன் அவனுடன் ஒரு சொப்பனத்தில் இடைப்பட்டார். ஒரு சொப்பனம் என்பது இரண்டாம் பட்ச வழியாய் இருந்தது. இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையை சரியா அல்லது தவறா என்று நிரூபிப்பதற்கு எப்பொழுதும் முதலாவது சரியான வழி வார்த்தைக்குத்தான் முதலிடமாய் இருந்தது. அல்லது வேறு ஏதாகிலும் இருந்ததா... பழைய ஏற்பாட்டிலே, ஆரோன் பன்னிரெண்டு கற்களை உடையவனாய் இருந்தான், அவனுடைய மார்ப்பதக்கத்திலே பதித்திருந்த பிறப்புக்கற்கள், அவர்கள் அதை அங்கே தேவாலயத்தின் தூணில் தொங்கவிட்டிருந்தனர். ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தாலோ, அல்லது ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனம் சொன்னாலோ, அவர்கள் அவற்றை இதனிடம் கொண்டு வந்தனர். அதை என்னவென்று சொல்லுவார்கள் என்று, ஊழியக்காரர்களாகிய உங்களுக்கு அது தெரியும். அது அந்த ஊரிம் தும்மிம். ஆகவே இந்த சொப்பனக்காரன் தன் சொப்பனத்தை சொன்னவுடன், அல்லது அந்த தீர்க்கதரிசி தன் தீர்க்கதரிசனத்தை உரைத்தவுடன், இயற்கைக்கு மேம்பட்ட வெளிச்சமானது அதின்மேல் பிரதிபலிக்க வில்லையென்றால், அதாவது ஊரிம் தும்மிம் அதை ஆமோதிக்கவில்லையென்றால், அது எவ்வளவுதான் தத்ரூபமாக காட்சியளித்தாலும் எனக்கு அதைக்குறித்து கவலையில்லை , அது தவறுதான். அது சரியென்று ஊரிம் தும்மிம் தான் சாட்சி பகர வேண்டும். நல்லது, இப்பொழுது, அந்த ஆரோனின் ஆசாரியத்துவமும் அந்த பழைய ஊரிம் தும்மிம் முறையும் கூட ஒழிந்து போய்விட்டது. ஆனால், தேவன் இன்னுமாக ஒரு ஊரிம் தும்மிம்மை உடையவராக இருக்கிறார், அதுதான் வார்த்தையாயிருக்கிறது. ஒருவேளை-ஒருவேளை ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தாலோ, அல்லது ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனம் கண்டாலோ, அது அந்த வார்த்தைக்கு முரண்பாடாக இருந்தால், அது எவ்வளவுதான் நிஜமானதாகத் தொனித்தாலும் எனக்குக் கவலையில்லை, அதை மறந்து விடுங்கள். அது தேவனுடைய ஊரிம் தும்மிம் அவ்வளவுதான். அது உண்மைதானென்று, அதுதான் பதிலுரைக்க வேண்டியதாயிருக்கிறது. அது, தேவனே தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதாயிருக்கிறது. 18ஆகவே, தேசத்திலே அந்தநாளில் தேவனுக்குத் தீர்க்கதரிசிகள் இல்லா திருந்தனர், ஆகவே தேவன் யோசேப்புடன் இரண்டாம் பட்ச வழியில் பேசினார். அங்கே, அதை வெளித்தோன்றச் செய்வதற்கு இருக்கவேண்டிய ஒன்று இல்லை என்றாலும், அவர் வாக்குத்தத்தம் செய்த எதைக்கொண்டும், தேவன் ஏதாவது ஒன்றின் மூலம் கிரியை செய்யமுடியும் என்பதை அது காண்பிக்கிறது. பார்த்தீர்களா? அவர் ஒரு சொப்பனத்தில் செயலாற்ற முடியும். அங்கே ஒரு தீர்க்கதரிசி இல்லை என்றாலும், பின்பு அவர் ஒரு சொப்பனத்தில் செயலாற்ற முடியும். ஆகவே நம்முடைய வரங்கள் எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அது ஒரு காரியமில்லை , தான் விரும்புகிற எந்த வழியிலும் தேவன் பேசமுடியும். ஆனால் அது அவரது வார்த்தையுடன் இருக்க வேண்டும். பாருங்கள்? அது வார்த்தையின்படி இருக்கவேண்டும். இப்பொழுது, அவனுடைய சொப்பனம் வார்த்தையின்படியே இருந்தது என்று கண்டு கொள்கிறோம், ஏனெனில் “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்”, என்று ஏசாயா சொல்லியிருந்தான், அது அப்படியே ஆயிற்று. அவனுடைய சொப்பனமும் வார்த்தை யின்படியே இருந்தது, அந்த கர்ப்பவதி இவளாகத்தான் இருந்தாள். அதன் பிறகு அந்த கர்த்தருடைய ஆவியானவர், கர்த்தருடைய தூதனானவர், அவனுக்குத் தோன்றி, அவனுடைய சொப்பனத்திலே “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவி யாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள பயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தி யாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.” என்றாரே. நல்லது, அது அதை அப்பொழுதே தீர்த்து வைத்துவிட்டது. அவன் ஒரு நீதிமானாயிருந்தான். அவன் அதை விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினான், அவன் அதை விசுவாசிக்கவேண்டுமென்று விரும்பினான். ஆனால் அதுவோ அவனுக்கு மிகவும் வழக்கத்துக்கு மாறானதாய் இருந்தது. மேலும், ஒரு மனிதன் ஏதாவதொன்றை விசுவாசிக்க விரும்பினால், அதாவதுஅதாவது சத்தியம் அவனுக்கு முன்னே வைக்கப்படுகிறது, அதை எடுத்துக்காட்ட, தேவன் ஏதாகிலும் ஒரு வழியை உண்டாக்கி, அது சத்தியம்தான் என்று நிரூபிப்பார். ஏனெனில், ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட அவனை இரட்சிப்பதற்காக தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார், தேவன் அவனை இரட்சித்திருக்கிறார். 19இப்பொழுது, அந்த வழக்கத்துக்கு மாறானதாக இருந்த அந்த காரியத்தை - அந்தக் காரியத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாததை நாம் கண்டு கொண்டோம். இந்த உயிர்த்தெழுதல் வழக்கத்துக்கு மாறானதாய் இருந்தது. அவர்கள், இன்னும் அவர்கள் அதை கவனித்திருப்பார்களானால், அது அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருந்தது. அவர் அவர்களிடம் “மனுஷகுமாரன் எருசலேமுக்குப் போகிறார், அவர் புறஜாதிகளால், பல பாடுகள் படவேண்டியிருந்தது, அவர் அவர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டு சிலுவை யிலறையப்படுவார், அடக்கம் செய்யப்படுவார், மூன்றாம் நாளில் உயிரோடெழுந் திருப்பார்” எனக் கூறியிருந்தார். பாருங்கள்? அவர், “யோனா இரவும், பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” எனச்சொல்லியிருந்தார். அவர் களுடைய தீர்க்கதரிசிகளில் ஒருவனான தாவீதே, தீர்க்கதரிசனமாக, “என்னுடைய ஆத்துமாவை பாதாளத்திலே விடீர், என்னுடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” எனக் கூறியிருந்தான். பாருங்கள்? எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்துப் பேசியிருந்தார்கள். பார்ப்பதற்கு அந்த சீஷர்கள், இன்னும் அவர்கள் அதை உணர்ந்து கொண்டவர்கள்போல, அறிந்துக்கொள்ள வேண்டியவர்களாயும் காணப்பட்டனர். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களேயாகில் அது அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அது அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வார்த்தை. ஆனாலும், அவர்கள் அதை உணர்ந்து கொள்ளவில்லை. பாருங்கள்? அவர் என்ன சம்பவிக்கும் என்று சொன்னாரோ, பழைய ஏற்பாடு என்ன சம்பவிக்கும் என்று சொன்னதோ அது சரியாக நிறைவேறியது. அது பூரணமாக நிறைவேறியது. அவர்கள் இன்னுமாய் அதைப் புரிந்து கொள்ளவில்லை. 20இப்பொழுது அவர்களில் இருவராகிய கிலெயோப்பாவும், அவனது நண்பனும் எம்மாவுக்குச் செல்லுகிறதான சாலையிலே, சென்று கொண்டிருந்தனர். அது ஒரு ஞாயிறு காலையாய் இருந்தது. ஆகவே, அவர்கள் தங்கள் வழியிலே, பேசிக்கொண்டு போனார்கள். அவர்கள் வழியிலே உண்மையான சோகத்தோடு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். என்னே! பார்ப்பதற்கு ஒரு திரையைப் போன்று, ஏதோ ஒன்றினால் உண்மையிலேயே அவர்கள் தோய்ந்து போய் அல்லது ஏமாற்றம் அடைந்து அந்தத் திரை அவர்களுக்கு முன்பாக தொங்கிக் கொண்டிருந்தது. தேவனும், காரியங்களை இவ்விதம் நிகழ அனுமதிக்கிறார். அவர் வேண்டுமென்றே அப்படிச் செய்கிறார். அது - அது உங்களை சோதிப்பதற்காகத்தான். இப்பொழுது, நீங்கள் அதைப் புரிந்துகொள்ளும்படியாக உங்களுக்கு அதைத் தெளிவாக்கட்டும், அதாவது, தேவன் தம்மிடத்தில் வருகிற அவருடைய ஒவ்வொரு மகனுக்கும் பிள்ளைப் பயிற்சியளிக்கப்பட விரும்புகிறார். ஒவ்வொரு மகனும் சோதிக்கப்பட வேண்டும்; நீ சோதிக்கப்படவில்லையென்றால், நீ ஒரு குமாரனல்ல. தேவனுடைய சிட்சையை நீ தாங்கிக்கொள்ளவில்லையென்றால், தேவனுடைய பிள்ளையல்ல. நீ ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை. “தேவனே உன் தகப்பன்” என்று, நீ சொல்லிக்கொள்ளுகிறாய், உரிமை கோருகிறாய் “ஓ, என்னால் அதை நம்பமுடியவில்லை ” என்கிறாய். நல்லது, அது தேவன் உன் தகப்பன் அல்ல என்பதைத்தான் காட்டுகிறது. பாருங்கள், நீங்கள்நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது கவனியுங்கள், இந்த சோதனை, தேவன் தம்முடைய ஒவ்வொரு பிள்ளையையும் சோதிக்கிறார். அவரிடத்தில் வருகிற எல்லோருமே முதலாவது சோதிக்கப்பட்டு, புடமிடப்பட்டு, நிரூபிக்கப்படவேண்டும். 21அவர் இங்கே இந்த பூமியிலிருந்தபோது அவரை நோக்கிப்பாருங்கள். ஒரு நாளில் அவர் திரும்பிப் பார்த்தார். மிகப்பெரிய திரள் கூட்டமான ஜனங்கள் அவரைச் சுற்றியிருந்தனர். ஓ அவர் முதலில் ஆரம்பித்தபோது, அவர் உண்மையில் வெகுவாகநேசிக்கப்பட்டார். எல்லா சபைகளும் தங்கள் கதவுகளை அவருக்குத் திறந்து கொடுத்தனர். “இந்த வாலிப ரபி, ஏன், அவரோ அவர் உண்மையில் நம் மத்தியில் எழும்பியுள்ள ஒரு தீர்க்கதரிசி என்பதில் அங்கே சந்தேகமில்லை. அவர் நம்முடைய வியாதிகளை சுகமாக்குகிறார். ஏன், இந்த சுகமளிக்கும் கூட்டங்களில் வருகை தந்து அவர் மாபெரும் காரியங்களைச் செய்கிறார்.” அது அருமையாயிருந்தது. ஆனால் ஒரு நாளிலே, பாருங்கள்? திரளானவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அது ஜனங்களின் கவனத்தை கவர்ந்திழுக்கிறதற்கான ஒரு அடையாளம். இப்பொழுது, அந்த அடையாளத்தைப் பின் தொடர்ந்து ஒரு சத்தம் வரவேண்டியிருந்தது. அதுதான் அவரது உபதேசம். கவனியுங்கள். ஆனால் அந்த சத்தம் வந்தபோது, ஓ.., அதுவோ வித்தியாசமாக இருந்தது. என்னே ! அவர்கள், அவர்கள் அவரை சிலுவையில் அறைந்து போட்டனர். ஏனெனில் அவர் தன்னை தேவனுக்குச் சமமாக்கிக் கொண்டாராம். அவர் அவர்கள் வியாதிகளை சுகமாக்கி, அற்புதங்களைச் செய்து, அவர்களுடைய இருதயங்களைப் பகுத்தறிந்து கூறின்போது அது அவர்களுக்கு அருமையாய் இருந்ததாம். ஆனால், அவர், “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று சொன்னபோது, ஓ என்னே! அது அவர்களுக்கு அவர் மிஞ்சிப்போவதாகக் காணப்பட்டது. அவர்களால் அதை ஏற்றுக் கொள்ளமுடிய வில்லை. பாருங்கள்? அவர்கள். அது அவர்களுக்கு மிஞ்சிப்போன ஒன்றாயிருந்தது. “அவர் தன்னை தேவனாக்கிக் கொள்கிறார், அவர்-அவர் தன்னை தேவனுக்குச் சமமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்” என்றார்கள். நல்லது, அவர் அவ்வாறுதான் இருந்தார். அவர் தேவகுமாரனாக இருந்தார். மேலும் “நீங்கள் அவர்களை அழைக்கிறீர்கள், யாருக்கு வார்த்தை வந்தது, அந்த தீர்க்கதரிசிகளுக்கு என்று உங்கள் வேதம் சொல்லுகிறது. நீங்கள் அவர்களை தேவர்கள் என்று அழைக்கிறீர்கள். பின்பு, ஒரு தீர்க்கதரிசியை நீங்கள் தேவர் என்று அழைக்கக் கூடுமானால் நான் தேவனுடைய குமாரன் என்று நான் கூறும்போது நீங்கள் என்னை எவ்வாறு குற்றம் சுமத்தலாம்? வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள், நான் என்னவாக இருக்கக்கூடும் என்பதை அவைகள்தான் உங்களுக்குக் கூறும். நான் என்ன செய்யவேண்டும் என்று வார்த்தை கூறுகிறபடி நான் செய்யவில்லை என்றால் பின்பு, நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் வார்த்தையாக இருக்கிற, என் பிதாவின் கிரியைகளை நான் செய்வேனேயானால், பின்பு - பின்பு நான் செய்கிற கிரியைகளை விசுவாசியுங்கள்.” இன்னும் அவர்கள் அதைச் செய்ய முடியவில்லை. 22ஆகவே, ஒருநாள், இயேசு சொன்னார். இப்பொழுது கவனியுங்கள். அவர் காரியங்களை விளக்கிக் கூறுவதில்லை . அவர் வெறுமனே கூறிவிடுகிறார். அவர், “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாவிட்டால், உங்களுக்குள் ஜீவன் இல்லை” என்று சொன்னார். சிறந்த மூளை அறிவு கொண்ட ஒரு கூட்ட ஜனங்கள், ஒரு கூட்ட பண்டிதர்கள் வெளியில் நின்றுகொண்டு, யூத மத குருமார்களும், சிறந்த பயிற்சி பெற்றவர்களும், உயர்கல்வி கற்ற மக்களும் அவர் அதைக் கூறின்போது என்ன நினைத்தார்கள் என்று உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா?. ஓ, அந்த பண்டிதர் அங்கே பார்த்துக் கூறியதை என்னால் கற்பனை செய்யமுடிகிறது. “வியூ” அந்த - அந்த ஊழியக்காரர்கள் எழுந்து நின்று ஹூ - ஊ, ஹூ - ஊ, என்று கூறினர். இப்பொழுது, அவர் அதை ஒருபோதும் விளக்கிக் கூறவில்லை , அவர் அதை ஒருபோதும் விளக்கிக் கூறவில்லை . அவர் அதைச் செய்யவேண்டிய அவசியமில்லை , அவர் அதை ஒருபோதும் விளக்கிக் கூறவேண்டியதில்லை. “ஏன்”, அவர்கள், “நல்லது, ஏன், அவர் நம்மை இவ்விதமாக ஆக்குகிறார். இவர் நாம் நர மாமிசம் தின்பவர்களாக, மனுஷ இரத்தம் குடிப்பவர்களாக மனித மாம்சம் புசிப்பவர்களாக வேண்டுமென்று விரும்புகிறாரா? என்றனர்”. அது எப்படிச் செய்யப்படவேண்டும் என்று அவர் சொல்லவே இல்லை. “நீங்கள் அப்படிச் செய்யவில்லையென்றால்” என்று மட்டும் கூறினார், பாருங்கள்? 23அதன்பிறகு அந்த ஆயிரக்கணக்கில் குவிந்திருந்த அந்த கூட்டம், ''ஊ-ஊ அப்படிப் போடு, பாருங்கள் கொஞ்சநேரத்தில் அது வெளிவர அவர்கள் எதிர்பார்த் திருந்தனர். மேலும் அது வெளிவந்ததை அவர் பார்த்தார் பாருங்கள். முதற்கண் அவர்கள் ஒட்டுண்ணிகளாய் இருந்தனர். ஆகவே அவர்கள் அதன்பிறகு அவருடன் நடக்கவில்லை . ஆகவே, அவர் திரும்பிப் பார்த்தபோது, அவருடன் எழுபது பேர் இருந்தனர், ஆகவே அந்த எழுபதுபேரை அவர் பார்த்து, “மனுஷகுமாரன் தான் முன்பு இருந்த பரலோகத்துக்கு ஏறிப்போகிறதை கண்டால் என்ன சொல்லுவீர்கள்” என்று கூறினார். இப்பொழுது, அவர் அதை விளக்கவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நல்லது மனுஷகுமாரன் தாம் வந்திருந்த இடத்திற்கு ஏறிப்போவாரா? அதுசரி, நமக்குத்தான் அவருடைய தாயைத் தெரியுமே. அவருடைய சகோதரர்களைத் தெரியும், சகோதரிகளைத் தெரியும், அவர் பிறந்தபோது அவரை கிடத்தியிருந்த மாட்டுத்தொழுவம் தெரியும், அவரை ஊஞ்சலாட்டிய தொட்டில் தெரியும். ஏன், நாசரேத்தூரிலிருந்து வந்ததும் தெரியும். அங்கே மேலே இருந்து வந்தாரா? இது கடினமான பேச்சு” என்று கூறிப் போய்விட்டனர். அவர்கள் அதன் பிறகு அவருடன் நடக்கவில்லை . பாருங்கள்? 24இப்பொழுது, இந்த சீஷர்கள் எல்லாம் எப்போதும் அங்கேதான் நின்று கொண்டிருந்தனர், ஆயினும் அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் அதை விசுவாசித்தனர். அவர்களாலும் அதை விளக்கிக்கூற இயலவில்லை, அவரும் அதை விளக்கிக்கூறவில்லை. ஆனால், பாருங்கள். அவர்கள் ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களால் அதை விளக்கிக் கூற இயலவில்லை . ஆனாலும் அவர்கள் அங்கே அமர்ந்திருந்தனர். ஆகவே அவர் திரும்பி அவர்களைப் பார்த்து, “பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ள வில்லையா? உங்களிலும் ஒருவன் பிசாசாயிருக்கிறான். நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர் களா?” என்றார். அங்கேதான் பேதுரு அந்த நினைவில் நிற்கக் கூடிய வார்த்தைகளைக் கூறினார். அதாவது “கர்த்தாவே உம்மிடத்தில் மாத்திரமே ஜீவ வார்த்தைகள் உண்டு என்று நாங்கள் கண்டுகொண்டோம், நாங்கள் எங்கே போவோம்?” அவ்வளவுதான், நீங்கள் பாருங்கள், பாருங்கள்? 25அவர் அதை விளக்கிக் கூறவில்லை . அவர்கள் திரும்பப் போய்விடட்டும் என்றே அவர் அப்படிக் கூறினார். பாருங்கள்? விசுவாசம் கேள்வி கேட்பதில்லை , காரண காரியங்களை ஆராய்வதில்லை, அது தனக்குத்தானே வேதவசனங்களை ஆராய் கிறது. அவர்கள் வேதவசனத்தை ஆராய்ந்து பார்த்திருப்பார்களாயின், அவர் யாராக இருக்கிறார் என்பதை அது நிரூபித்துக் காட்டியிருக்கும். ஆனால் அவர் காரியங்களை அவ்விதமாய்க் கூறி விளக்காமல், அவர்களை குலுக்கிப்போட்டார். மேலும் அங்கே அந்த தோட்டத்திலே, அவர்கள், அவர் முகத்தின் மீது ஒரு துணிக் கந்தையைப் போட்டு மூடி, சிலர் அவரை தலையில் கொட்டி, “நீ ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால் இப்போது உன்னை அடித்தது யாரென்று சொல்லும் பார்க்கலாம், அப்பொழுது நாங்கள் - நாங்கள் உன்னை விசுவாசிப்போம்” என்று பரிகசித்தனர். அதுதான், அதேதான் அவர் அன்று தன் ஊழியத்தை முதலாவதாக துவக்கின நாட்களில் அவரை அந்த மலையின் மீது சோதித்து, 'நீ தேவகுமாரனா னால் இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி கட்டளையிடும் பார்ப்போம்“ என்று சொன்ன அதே பழைய பிசாசு. அதோ அந்த ஆசாரியர்களும், யூத மதகுருக்களும் அங்கே மேலே நின்றுகொண்டு, ”நீ கிறிஸ்துவானால் சிலுவையை விட்டு கீழே இறங்கி வந்து எங்களுக்கு நிரூபித்துக் காட்டு“ என்றனர். பாருங்கள்? அவர் அதை செய்திருக்கக் கூடும். தன்னைக் குட்டியது யார் என்று அவருக்குத் தெரியும், ஆனால் யாருக்காகவும் அவர் கோமாளி வித்தை காட்ட விரும்பவில்லை. அவர் வார்த்தையாய் இருந்தார். அவர் இன்னுமாக வார்த்தையாகவே இருக்கிறார். எப்போதும் வார்த்தையாகவே இருந்தார். இன்றும் வார்த்தையாக அப்படியே நிலைத்தி ருக்கிறார். அவர்கள் சற்றே திரும்பிப் பார்த்திருந்தால், அவர்களால் அதைக் கண்டிருக் கக்கூடும். ஆனால் அவர்களோ அதைச் செய்யவில்லை. 26அவர்கள் அந்த வழியிலே, இருந்ததை கவனியுங்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? (இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற நீங்கள், கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்) அவர் அவர்களுக்குக் காட்சியளிக்கும் போது அவர்கள் அவரைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இப்பொழுது, அதாவது அவரைக் குறித்து நீங்கள் பேசும்போது அவர் அவ்விதமாகத்தான் வருகிறார், இன்றைக்கு இருக்கிற தொல்லை என்னவென்றால் அவரைக் குறித்துப் பேசுவதை விட்டு மற்றெல்லா காரியத்தைக் குறித்தும் நாம் பேசுகிறோம். அவருக்கு துதியையும், மகிமையையும் செலுத்தவேண்டிய நேரத்தில் எப்பொழுதுமே நாம் செய்யவேண்டிய ஒரு வியாபாரம் குறித்து காரியங்களையோ அல்லது துணி துவைப்பதைக் குறித்தோ அல்லது எந்தவகை சலவைத்தூள் உபயோகிக்க வேண்டும் என்றோ பேசுகிறோம். “நம்முடைய பொக்கிஷம் எங்கேயோ, அங்கே நம்முடைய இருதயமும் இருக்கிறது.'' அவர்கள் அவரை அடையாளங்கண்டு கொண்டிருந்திருக்கவேண்டும், ஆனால் அவர்கள் ஒருபோதும் அதைச் செய்யவில்லை. மேலும் அது இன்றைக்கும் அவ்விதமா கவே உள்ளது. இருப்பினும், வேதவாக்கியம் அவ்வாறு கூறியுள்ளது. பாருங்கள்? 27அவர்- அவரைக் குறித்த வேதவசனம் அந்த காலத்துக்கென்று வாக்குத்தத்தம் செய்துள்ளதை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். நினைவு கூருங்கள், அவர் ஆரம்பத் திலிருந்து ஆரம்பிக்கிறார். அவர், “ஓ புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே” என்றார். அவர் அவர்களுக்கு அந்த வேதவாக்கியங்களை விளக்கிக்காட்டினார். அந்த வேதவாக்கியங்கள் அவர்களுக்குப் பிரசங்கிக்கப்பட்டபிறகும், இன்னுமாக அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அது இன்றைய நவநாகரீக சபையாய் இல்லையா, எனக்குத் தெரியவில்லை. வேதவாக்கியங்கள், அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது, இன்னுமாக அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்களை அவருடைய சீஷர்கள் என்று உரிமை கோரிக்கொண்டு, அவரோடு நடந்து கொண்டிருந்தனர். தேவன் அந்த நாளுக்கென்று எடுத்து வைத்திருந்த அவரைக் குறித்த வேதவாக்கியத்தை அவர்களிடம் விளக்கிக் கூறியிருந்த போதும், இன்னுமாக, அவர்கள் அவரை அறிந்து கொள்ளவில்லை. “கிறிஸ்து இவ்விதமாக பாடுபட்டு, மகிமையில் பிரவேசித்து மறுபடியும் உயிரோடெழுந்திருக்க வேண்டியதென்று நீங்கள் அறியீர்களா?” என்று அவர் கூறினார். அவர்... “தீர்க்கதரிசிகள் எல்லோரும் கிறிஸ்துவைக் குறித்து கூறியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியீர்களா?” என்று சொன்னதை அவர்கள் கவனித்திருக்க வேண்டும். அவர் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து, முழுகாரியத்தையும் விளக்கிக் கூறி, தெளிவாகப் புரியவைத்தார். அதை அந்த வசனங்களை எவ்வளவு வெளிப்படை யாகக் கூறமுடியுமோ அவ்வளவு பூரணமாக தெளிவாக்கிக் காண்பித்தபிறகும், இன்னு மாக அவர்கள் அதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதைச் சுற்றி நடந்த அவர்கள், அவருடைய சீஷர்களாக இருக்கவேண்டியவர்கள். ஊ, ஓ, அது அப்படியா? அது அப்படியா? அவரோ அந்த வேதவாக்கியத்தின் நிறைவேறுதலாக அங்கே நின்று கொண்டிருந்தார். ஆனாலும் அவர்கள் இன்னுமாக அதைப் பிடித்துக்கொள்ளவில்லை. பாருங்கள்? 28இப்போது அது சரியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த காலத்திற்குரிய ஒரு நல்ல காட்சியாய் இருக்கிறது. அது மோசமானது என நான் கூறவில்லை . அது சத்தியமாக இருக்கிறது என்பதற்காக நான் அதைச் சொல்லுகிறேன். அது சரியாகவே உள்ளது. அவர் செய்திருந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறியிருந்தும், இன்னுமாக அவர்கள் அவரை அடையாளங் கண்டுகொள்ளவில்லை. அவர் அவர்களிடம் எதைப் பறை சாற்றிக் கொண்டிருந்தாரோ அந்த நபராகவே அவர்கள் முன்பாக நின்றிருந்தபோதும், இன்னுமாக அவர்கள் அவரை அடையாளங்கண்டு கொள்ளவில்லை. நிறைவேறியிருந்த வேதவாக்கியங்களை அவர்கள் அடையாளங்கண்டு கொள்ளா ததற்காக அவர்களுக்குச் சொல்லப்பட்ட கடிந்துக்கொள்ளுதலை கவனியுங்கள். இப்போது, அவர்கள் அவற்றை அறிந்துகொண்டபோது, அவர்கள் சீஷர்களாய் இருந்தனர். அவர்களெல்லாரும் மகத்தான தியாகத்தைச் செய்த மாமனிதர்களாய் இருந்தனர். அவர்கள் அவரை நேசித்த மனிதர்களாய் இருந்தனர். அவர்கள் அவரால் பயிற்றுவிக்கப்பட்ட மனிதர்களாய் இருந்தனர். ஆனால், இன்னுமாக, அவர் இந்தக் காரியங்களையெல்லாம் அவர்களிடம் கூறி அவர்கள் கூட்டத்தில் நின்று இந்தக் காரியம் சம்பவிக்கும் என்றும் இங்கே அது சம்பவித்தது. அவர் உயிர்த்தெழுந்தபிறகு அவர்களும் அவருடன் கூட நின்றிருந்தபோதும், அவர்களால் அவரை அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லை. “அதுபோன்ற ஒரு காரியத்தை நாம் செய்யமுடியுமா?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். அது செய்யப்படக்கூடியதே நாம் அதை செய்யமுடியும். அதுசரி. அது நிச்சயம் முடியும். அவர் செய்யப்போகின்ற காரியத்தைக் குறித்து, அவருடைய வார்த்தையில் அவர் வாக்குத்தத்தம் செய்தபிறகு அது அவர் சொன்னது நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறிய பின்பும், இன்னுமாக நாம் அதன் மீது ஏறி நடந்து செல்கிறோம். அதைத்தான் அவர்களும் செய்தனர். இப்போது, அவர் அங்கே கடந்துவந்து, தான் சிலுவையில் அறையப்படப் போவதாகவும், மூன்றாவது நாளிலே உயிர்த்தெழப்போவதாகவும், இப்படியாக எல்லாவற்றைக் குறித்தும் அவர்களிடம் கூற ஆரம்பித்தார். 29அவர்கள் கோபங்கொண்டு இவ்விதம் கூறினார், 'உங்களுக்குத் தெரியுமா, சிலர் கல்லறைக்குச் சென்றனர், ஸ்திரீகளில் சிலரும் சென்றிருந்தனர், அவர்கள், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று. இந்த வதந்தி அந்த பகுதி முழுவதையும் கலக்கமடைய செய்தது எனக்கூறினர். மேலும் அவர்கள் அவரிடம், “இந்தக் காரியங்களையெல்லாம் அறியாதபடிக்கு நீர் அந்நியராய் இருக்கிறீரோ?” என்று கேட்டனர். “எந்தக் காரியங்களை?” என்று அவர் அவர்களிடம் அதைக்குறித்து ஒன்றும் தெரியாதவர் போல், கேட்டார், பாருங்கள். அவர்களை சற்று தூரத்தில் விலக்கி அதைக் கூறினார். அவர் அதை வேண்டுமென்றே, அவர்களை சோதித்துப் பார்க்கத்தக்கதாகச் செய்தார். அவர் தமது சுபாவத்தை மாற்றுவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? அவர் அதே காரியத்தை உங்களை - உங்களை சோதிப்பதற்காகச் செய்கிறார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்கும்படியாக, அவர் ஒருவிதமாக கிரியை செய்வார், அது உங்கள் முன்பாகப் போடப்படும். நீங்கள் அப்போது அதைக் குறித்து என்ன கூறப் போகிறீர்கள் என்று பார்க்கும்படிக்கு, உங்களுடைய சுபாவம் எப்படி இருக்கப் போகிறது. நீங்கள் அதை எவ்விதம் ஏற்றுகொள்ளப் போகிறீர்கள், அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவர் அதை வேண்டுமென்றே செய்கிறார். இன்றும் அப்படியே செய்கிறார். ஏனெனில் அது அவருடைய மாறாத சுபாவம். அவர் அதைக் கடந்த காலங்களில் செய்தார். 30எலியாவை நினைத்துக்கொள்ளுங்கள். அவனைக் கொன்று போடுவதற்கு இவனுக்கும்கூட சேனை வீரன் இருந்தான். அவன், “நான் ஆகாபுக்குக் காவல் புரியும் ஒருவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருந்த நான், சிறைக்கைதியைத் தப்பவிட்டுவிட்டேன்” என்று கூறினான். அவன் அதைச் செய்யாமல் ஆகாப் இவனுடைய சொந்த நியாயத்தீர்ப்பை அறிவிக்கும்படியாக அவன் அதைப்போன்ற ஒன்றைச் செய்தான். 96. நோவாவின் நாட்களிலும் அவர் அவ்விதமாகவே காரியங்களை செய்தார், அவர் தன்வழியை மாற்ற முடியாது. தேவன் ஒருவிதமாக கீழறங்கி வருகிறார். ஆனால் எப்போதும்...... “நல்லது, எது சரி எது தவறு என்று நான் எப்படி அறிந்து கொள்வது” என்று நீங்கள் கேட்கலாம். அது அந்த மணிநேரத்திற்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வேதவாக்கியமாய் இருக்கிறது. அதுதான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வேதவாக்கிய மாய் உள்ளது. அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை விட்டு வெளிவந்து, அவர்கள் இருந்த பாரம்பரியத்திலிருந்து பிரிந்து அவர் அவர்களுக்கு செய்யச் சொன்ன, “வேதவாக்கி யங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” போன்ற வேதவாக்கியங்களை வாசித்திருப்பார்களானால் நான் யார் என்று அவைகளே கூறும் என்றார். அவர்களோ, “நல்லது, இப்போது, எங்கள் ரபி இதையும், அதையும் சொன்னார், நாங்கள்-நாங்கள் சபை என்ன சொல்லுகிறதோ அதையே விசுவாசிக்கிறோம் என்றார்கள். பாருங்கள்? சபை என்ன சொல்லுகிறது என்பதல்ல. தேவன் என்ன சொல்லுகிறாரோ அதுதான். ஸ்தாபனம் என்ன சொல்லுகிறது மற்றது என்ன சொல்லுகிறது என்பதல்ல காரியம். தேவன் என்ன சொல்லுகிறார் என்பதே காரியம். நீங்கள் தேவனை விசுவாசியுங்கள். இங்கேதான் அவர்கள் தவறிவிட்டனர். ஏனென்றால் அவர்கள் அதை அடையாளம் காணத் தவறி அவ்வளவாய் பாரம்பரியத்துக்குள்ளாக இருந்து, அவர்கள் தவறிப் போய்விட்டனர். 31இப்பொழுது நாம் கண்டு கொள்கிறோம். அதன்பிறகு, அவர், அவர் அவர்களைக் கடிந்து கொண்டார். கவனியுங்கள்! “இந்தக் காலத்தில் நிறைவேற வேண்டிய அடை யாளங்களையும், காரியங்களையும் விளங்கிக் கொள்ளக்கூடாதபடிக்கு இருக்கின்ற புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே! நீங்கள் பார்க்கிற இந்த அடையாளங்கள் அனைத்தும் இந்த நாளில் நிறைவேறும் என்று தீர்க்கதரிசிகள் யாவரும் கூறினவை களை விளங்கிக் கொள்வதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, இந்த அடையாளங்கள் இந்த நாளில் நடக்குமென்று வேதம் கூறுகின்றது. அவைகள் நடக்கிறதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அப்படியிருந்தும் இதை விசுவாசிக்க கூடாத படிக்கு, அவ்வளவு முட்டாள்களாய் இருக்கிறீர்களா?” அவர்கள் எதிரிலேயே அவர் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்களோ அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. குருடர்களைக் குறித்தும் அவர் பேசினார்! நாம் அதைச் செய்ய முடியுமா? நாம் எந்த மணிவேளையில் ஜீவிக்கிறோம். பாருங்கள். எந்த மணிநேரம், என்ன, எப்படி என்று வேத வசனங்களை ஆராயாமல் இருப்போமென்றால், ஒருவேளை நாமும் அப்படியே செய்திருப்போம். நாம் நினைப் பதைக் காட்டிலும் ஒருக்கால் அது காலதாமதமாயிருக்கலாம். இன்னுமாய் அவர்கள், அவருடைய சீஷர்கள் என உரிமை கோரிக் கொண்டிருந்தனர். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம் எனக்கூறி, வேதாகமத்தில் உள்ள அனைத்தையும் விசுவாசிப்பதாக உரிமை கோரினர். இங்கே, இங்கே வேதாகமத்தின் தேவனாகிய மேசியா எழுதப்பட்ட அதே வார்த்தையை அடையாளம் காட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அவர்களோ அந்த வார்த்தை யின் விசுவாசிகளாய் இருக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள். அவர் அவர்களுக்கு அதைக் குறிப்பிட்டுக் காட்டி அதை அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “இதைக் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்று நினைவு கூருங்கள், இதைக் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்று நினைவு கூருங்கள், மேலும் இயேசு என்ன செய்யவேண்டும் அல்லது கிறிஸ்து எதை, எப்படிச் செய்ய வேண்டும், இன்னும் மற்ற இந்த எல்லா காரியங்களும் எப்படி என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார். இருப்பினும் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் அதை அறிந்து கொள்ளவில்லை. அது என்ன? அவர்கள் வார்த்தையை வெறும் எழுத்து அளவிலேயே புரிந்து கொண்டார்கள். ஆனால் வார்த்தை, வார்த்தையின்படி அல்லது எழுத்தின்படி வியாக்கியானிக்கப்பட்ட போது அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. 32இன்றைக்கும் காரியம் அதே விதமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வியாக்கியானத்தை உடையவனாய் இருக்கிறான். முழு காரியத் தையும் தேவன் கண்டனம் செய்யும்போது, தேவனே தம் சொந்த வியாக்கியானத்தைச் செய்கிறார். ஒரு காரியத்தை தேவன் செய்வதாக சொல்லியிருந்திருப்பாரானால் அவர் அதைச் செய்யும்பொழுது. அதுவே அதனுடைய வியாக்கியானமாய் இருக்கிறது. தேவனே தம்முடைய சொந்த வார்த்தையின் வியாக்கியானியாயிருக்கிறார். அவர் அங்கே தம்முடைய சொந்த வியாக்கியானியாக நின்று கொண்டிருந்தார். 33அல்லேலூயா! அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் தம்முடைய சொந்த வியாக்கியானத்தைச் செய்கிறார். அவருக்கு வார்த்தையை வியாக்கியானம் செய்வதற்கு, அவருக்கு எந்த வேதகலாசாலையோ, அல்லது வேறெந்த ஊழியக்காரர்களோ அல்லது நானோ, நீங்களோ அல்லது வேறு எவருமோ தேவைப்படுவதில்லை. அவர் அதை வாக்குத்தத்தம் செய்தார், அவர் திரும்பி நின்று அதைச் செய்கிறார். அது அதைத் தீர்த்து வைக்கிறது. அது அதற்கு தானே வியாக்கியானம் செய்து கொள்கிறது. அங்கே அவர் அந்த ஒவ்வொரு வியாதிகள், ஒவ்வொரு பிணிகள் மற்றும் மரணம், நரகம், கல்லறை ஆகியவற்றின் மகத்தான பெரிய ஜெய வீரராய் நின்று கொண்டிருந்தார். அவர்கள் அவ்வளவு காலமாக என்ன விசுவாசித்துக் கொண்டிருந் தார்களோ, அதேவிதமாக அவர் மறுபடியும் உயிரோடெழுந்து அங்கே அவர் நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவர்களால் அதை நம்பமுடியாமல் போய்விட்டது. அவர் எல்லா நேரங்களிலும், தன்னைக் குறித்து அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந் தார். “அவர் மோசே தொடங்கி மற்றெல்லா தீர்க்கதரிசிகளும் தன்னைக் குறித்து எழுதியிருக்கிற எல்லாக் காரியங்களையும் அவர்களுக்குக் குறிப்பிட்டு காட்டி தம்மைக் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் இன்னுமாக அவர் களால் அதைப் பிடித்துக்கொள்ள முடியாமல் இருந்தது. அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாதது போல்தான் காணப்பட்டது. அவ்வளவு தான். இப்பொழுதும் அப்படியேதான். இன்று அதன் காரியம் என்ன? அதன் காரணம் என்ன? நாம் நம்முடைய பிரமாணங்களை கற்று கொள்வதில் அதிக அலுவலாய் இருக்கிறோம். நாம் நம்முடைய - நம்முடைய ஸ்தாபன நிகழ்ச்சிகளில் மிகவும் அலுவலாய் இருக்கிறோம். சாயங்கால சூப் விருந்துகள் மற்றும் சபைகளில் லாட்டரி விளையாடுவது போன்றவைகளில் அதிக அலுவலாய் இருக்கிறோம். பெண்கள் உதவி சங்கங்களில் நாம் மிகவும் அலுவலாய் இருக்கிறோம். நாம் நம்முடைய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும், மற்றும் இந்த எல்லா புத்திக்கெட்ட காரியங்களிலும் மிகவும் அலுவலாய் இருக்கிறோம். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து அவைகள் சரியாக இருக்கிறதா? அல்லது இல்லையா? என்று பார்க்க முடியாத அளவிற்கு, நாம் மிகவும் அலுவலாய் இருக்கிறோம். 34நீங்கள் ஒரு சிற்றூண்டி விடுதிக்கு இறங்கி, கடந்து செல்கிறீர்கள். அங்கே போய் ஒரு கோப்பை சூப் ஆர்டர் செய்கிறீர்கள். அதற்குள்ளாக ஒரு சிறு சிலந்தி பூச்சி இருக்கிறது, அதற்காக அந்த சிற்றூண்டி விடுதி மீது வழக்கு தொடர்ந்து விடுவீர்கள். அதில் ஒரு சிலந்தி பூச்சி இருக்கும்போது நீங்கள் ஒன்றும் செய்யாமல் அப்படியே பருகி விட மாட்டீர்கள். ஏனென்றால், அந்த சிறு சிலந்தி பூச்சி உங்கள் சிறு உடலைக் கொன்று விடும் என்று உங்களுக்கு அந்த பயம் உண்டு. ஆனால் அந்த ஆத்துமாவுக்குள்ளே, நீங்கள் எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியே எதை வேண்டுமானாலும், எந்த ஒரு பிரமாணமானாலும், ஒருபோதும் அதற்குள்ளாக சரியாக பார்க்கிறதில்லை . அது சரியா, தவறா என்று பார்ப்பதில்லை. “மனுஷனுக்கு சரியாகத் தோன்றுகின்ற வழிகள் உண்டு” வேதவாக்கி யங்களை ஆராய்ந்துப் பாருங்கள். அந்த ஆத்துமா நித்தியமானது, உங்களுக்குத் தெரியும். ஆகவே, அப்படி செய்யாதீர்கள். அதற்குள்ளே எதை எடுத்துக்கொள்கிறீர் கள் என்பதை சற்று கவனியுங்கள். பாருங்கள், இந்த பிரமாணங்கள் மற்றும் இந்த எல்லாக் காரியங்களினாலும் அதை ஒரு தங்கும் விடுதிபோல் நாம் ஆக்கி விடுகிறோம். அப்படியே ஒரு தங்கும் விடுதியில் சேர்ந்து கொண்டால் எல்லாம் சரியாகி விடுகிறது போல ஜனங்கள் இன்றைக்கு அப்படித்தான் எண்ணுகிறார்கள். அந்த காரணத்தினால் தால் இன்றைக்கு மக்களுக்கு படிக்கவோ, தியானிக்கவோ, ஆராய்ந்து பார்க்கவோ அந்தக் காரியங்கள் சரியாக இருக்கின்றதா? தவறா இருக்கின்றதா? என்று சோதித்துப் பார்க்கவோ அவர்களுக்கு நேரமில்லை. 35கிறிஸ்துவே அதை வியாக்கியானம் செய்யட்டும். அவர் சொன்னது, அது நிறை வேறும் என்றால் அது சத்தியமாயிருக்கிறது. அது இன்றைய நாளுக்குரியதா என்று கவனித்துப் பாருங்கள். நான் கடந்த இரவு குறிப்பிட்டது போல, மோசேயானவன் நோவாவுடைய செய்தி யுடன் வரமுடியாது. அதேபோல் இயேசுவும், மோசேயுடைய செய்தியோட கூட வர முடியாது. பாருங்கள்? அது அப்படித்தான் இருந்தது. அது அதேவிதமாகத்தான் ஒவ்வொரு மணிவேளைக்கும் அது ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, நாம் லூத்தரன் செய்தியுடன் வரமுடியாது. வெஸ்லியின் செய்தி யோடும் வரமுடியாது. அதேபோல் பெந்தெகோஸ்தே செய்தியோடும் வரமுடியாது. அதையெல்லாம் தாண்டி நாம் எங்கோ இருக்கிறோம். நீங்கள் சொல்லுகிறீர்கள். “ஓ! நீங்கள் ஏதோ... நல்லது. கத்தோலிக்க சபையும் லூத்தர் எதையோ புதிதாகக் கொண்டு வருகிறார் என்று நினைத்தது. வெஸ்லியும் அப்படித்தான் நினைத்தார். அவர்கள்.... லூத்தரன்கள் வெஸ்லி ஏதோ புதிதாகக் கொண்டு வருகிறார் என்று நினைத்தனர். அதே போல் வெஸ்லியர்களும் பெந்தேகொஸ்தேகாரர்கள் புதிதாக ஏதோ கொண்டு வருகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் அதன் காரியம் என்ன வென்றால், அவர்கள் ஒவ்வொரும், வேதவசனங்களைப் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டியதாயிருந்தது. அதுவே ஒவ்வொரு காலத்தையும் அடையாளம் காட்டியது. இப்பொழுது அவர் செய்து காட்டிக்கொண்டிருக்கின்ற காரியங்கள், அவரையோ, தேவனுடைய வாக்குத்தங்களையோ அடையாளம் காட்டவில்லையென்றால், அதைத் தனியே அப்படியே விட்டுவிடுங்கள். ஆனால் அது இவ்விதமாக சம்பவிக்கும் என்று சொல்லி அது அப்படியே சம்பவித்தால், அப்பொழுது அதை விசுவாசியுங்கள். அது ஒரு மனிதனல்ல. அது தேவனே பேசுகிறதாகும். அவரே தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதாகவும் இருக்கிறது. 36“கிறிஸ்துவைக் குறித்து எல்லா தீர்க்கதரிசிகளும் கூறியிருப்பவைகளை விசுவாசிக்க கூடாமலிருக்கிற புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே” என்றார். அப்படி இருந்தும் அவருடைய சீஷர்களால் அந்த எழுதப்பட்ட வார்த்தையை விசுவாசிக்க முடியவில்லை. ஏனென்றால் அதைக்குறித்து மிகுந்த அலுவலாய் இருந்தார்கள். ஓ! நல்லது. அவர்கள் மிகவும் சோகமாயிருந்தார்கள். அதைக்குறித்து, அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று தாங்கள் விசுவாசிப்பதாக இன்றைக்கும் அவர்கள் உரிமை கொண்டாலும், “ஓ! அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும் அவர் என்றென்றைக்குமாய் உயிரோடிருக்கிறார் என்றும் நாம் விசுவாசிக்கிறோம்” என்று நாம் அதைக்குறித்து பேசிக்கொள்கிறோம். மேலும் அவர் தாம் செய்வேனென்று வாக்குரைத்த விதமாக ஏதாவது ஒரு காரியத்தை இன்றைக்குச் செய்யட்டும். பாருங்கள், அவர்கள் என்ன சொல்லுகிறார்கள். “நல்லது, அது ஒரு கூட்ட பரிசுத்த உருளைகளாக இருக்க வேண்டும். அல்லது மனோதத்து வத்தால் அதைச் செய்கிறார்கள் அல்லது அவர்கள் ஒரு கூட்ட குறி சொல்லுகிறவர் களாக இருக்க வேண்டும் அல்லது...'' என்று பிறகு, அவர் செய்தபடி அப்படியே பாருங்கள், அது அதே ஆவி. இப்பொழுது நினைவு கூருங்கள். பிசாசு தன்னுடைய மனிதனை எடுத்துக்கொள்கிறான். ஆனால் தன்னுடைய ஆவியை அவன் எடுத்துக் கொள்வதில்லை. அந்த மனிதர்கள், மதபோதகர்கள் மேல் அங்கே முன்பு இருந்த அதே ஆவிதான். 37நினைவு கூருங்கள். அந்த பரிசேயருக்கு விரோதமாக ஒருவனும் விரல் நீட்ட முடியாது. அவர்கள் உத்தமமாய் ஜீவிக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள். அப்படி உத்தமமாய் இல்லையென்றால், அவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். அவர்கள் அருமையானவர்களாய், நல்லவர்களாய் இருந்தனர். நல்ல மனிதர்களாய் இருந்தனர். மெத்தப் படித்தவர்களாயும், போதகர்களாகவும், மேதாவிகளாகவும் இருந்தனர். இயேசுவோ அவர்களைப்பார்த்து, “நீங்கள் ஒரு கூட்டம் பாம்புகள் நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளை செய்கிறீர்கள்” என்றார். ஏன்? ஏன் ஒரு மனிதன், தேவன் அது போன்ற ஒரு மனிதனுக்கு ஒரு வியாக்கியானத்தை இப்படிச் செய்து, இப்படிப்பட்ட வார்த்தையை எப்படிச் சொல்ல முடியும். ஏனென்றால், அவர்கள் அந்த அடையாளம் காணப்பட்ட வார்த்தையை ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையைக் காண மறுத்து விட்டனர். 38இப்பொழுது, இன்று நாம் வந்திருக்கிறோம். அநேக தடவை நாம் சொல்லியிருக் கிறோம். லூத்தரன்கள் சொன்னார்கள், “நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தபோது அதைப் பெற்றுகொண்டீர்கள். அவ்வளவுதான்” என்றார் கள். நசரேயர்கள் மற்றும் பரிசுத்தயாத்திரீகர்கள், சுயாதீன மெத்தோடிஸ்டுகள், “இல்லை, அதைப் பெற்றுகொள்ள நீங்கள் சப்தமிட வேண்டும்” என்று சொல்லுகிறார்கள். பெந்தேகொஸ்தெகாரர்கள், “அதை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு அந்நிய பாஷையில் பேசவேண்டும்” என்று சொல்லுகிறார்கள். அவர்கள் எல்லோருமே தவறாயிருக்கிறார்கள். சூனியக்காரிகள், மந்திரவாதிகள் அந்நிய பாஷையில் பேசுகிறதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் குதித்து கூக்குரலிட்டு மேலும் முகமதியர்கள் தங்கள் விரல்களின் நகங்களிக்கிடையே மரச்சிராய்களை சொருகி பெந்தெகொஸ்தேகாரர்கள் கூட அப்படியாய்க் கத்தி, என் வாழ்க்கையில் நான் பார்த்திராத அளவிற்கு அவ்வளவு சத்தமாய்க் கூக்குரலிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்னுமாய் விசுவாசிப்பதும் சரிதான், அந்நியபாஷையில் பேசுவதும் சரிதான், சத்தமிடுவதும் சரிதான், களிகூருவதும் சரிதான். ஆனால் இன்னுமாக காரியம் அதுவல்ல. அந்த பரிசேயர்களில் சிலர், 'நல்லது, அது ஆவியின் கனிதான், அது சரிதான்“ என்றார்கள் அந்தப் பரிசேயர்கள் அதிகமாக ஆவியின் கனிகள் உடையவர்களாய் இருந்தனர். நாம் எதை ஆவியின் கனியென்று சொல்லுகிறோமோ? (அல்லது) நாம் எந்தவிதமான ஆவியின் கனிகளை உற்பத்தி செய்கிறோமோ, அதைக்காட்டிலும் பல மடங்கு ஆவியின் கனிகளை அவர்களை உடையவர்களாய் இருந்தனர். 39இப்போது நான் அவரை விசாரணைக்குப்படுத்தினால் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள். அந்த நாளிலே இங்கே பட்டணத்திற்குள்ளே வாலிபனைப் போன்ற ஒருவன் வந்து அவனைத்தானே தீர்க்கதரிசியென்று அழைத்துக்கொண்டான் அல்லவா? அவனை ஒரு நிமிடம் விசாரணைக்கு உட்படுத்திக் காண்பிப்போம். ஜனங்களாகிய உங்களிடம் அவருக்கு விரோதமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். இவ்விதமான காரியத்தை நான் செய்வதற்காக தேவன் என்னை மன்னிப்பாராக! ஆனால், ஒரு குறிப்புக்காக இதைச் சொல்லுகிறேன். நான் இந்த வாலிப நபராகிய அவன் இங்கே சுற்றி வந்து, தன்னைத்தானே ஒரு தீர்க்கதரிசி என அழைத்துக் கொள்கிறான் என்று சொல்லுகிறேன். அவன்தானே கலிலேயாவிலிருந்து வந்தவன். அவன் ஏராளமான சுகமளித்தல், மற்றும் அதுபோன்ற காரியங்கள் செய்கிறான். ஆனால் அது எந்த அர்த்தத்தத்தையும் உண்டாக்கவில்லை. இங்கே பாருங்கள், நம்மிடம் பெதஸ்தா குளம் இருக்கிறது. அங்கு முடமானவர்களும் படுத்துக்கிடக்கிறார் கள். தேவதூதன் ஒருவன் வந்து எப்பொழுதாவது கலக்கும் போது யார் வேண்டு மானாலும் இறங்கலாம், இதைவிட தேவனுக்கு வேறென்ன வேண்டும்“ பாருங்கள், அவர்கள் அந்த நாளுக்கான வார்த்தையைக் காணத்தவறி விட்டனர். வாக்குத்தத்த மானது அப்பொழுது நிறைவேற ஆயத்தமாயிருந்தது. 40இப்பொழுது அவர்கள், 'நாங்கள் அவரை ஆவியின் கனியினாலே நிதானிப்போம் என்று கூறுகிறார்கள். இப்பொழுது பாருங்கள். உங்களது பக்கத்தில் நின்றது யார்? நீ ஒரு வாலிபனாய் சுற்றி வந்தபோது காலமெல்லாம் உன் அருகில் நின்று, உனக்கு யெகோவாவின் வார்த்தைகளைப் படித்துக் காண்பித்தது யார்? உன்னுடைய அருமையான, அந்த தெய்வீகமான வயதான ஆசாரியன் தானே! உன் அப்பாவும், அம்மாவும் ஒருவரோடொருவர் சண்டைபோட்டுக் கொண்டு, ஒருவரைவிட்டு ஒருவர் பிரிய இருக்கும்போது அவர் ஒருவர் தோளில் ஒரு கரத்தையும் இன்னொருவரின் தோளில் மற்றொரு கரத்தையும் போட்டு அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டுமாக ஒன்று சேர்த்து வைத்தது யார்? அந்த வயதான தெய்வீகமான ஆசாரியன் தானே. சரிதான் உன் தகப்பானாருடைய வயல்களெல்லாம் காய்ந்துபோய், விளைச்சல் இல்லாமல், உன் தகப்பனாரிடம் பணமே இல்லாமல் போய், அவர் துன்பம் அடைந்த போது உனக்கு உண்ண ஆகாரம் இல்லாதபோது, உன் தகப்பனாரிடம் ஒரு காசோலையில் கையொப்பமிட்டு பணத்தைக் கொடுத்தது யார்? அந்த வயதான தெய்வீகமான ஆசாரியன்தானே. நீ பிறந்த போது, நீ முதல்முதலாக இந்த உலகத்தில் வந்தபோது உன் தகப்பனோடும், உன் தாயோடும் நின்றது யார்? அந்த வயதான தெய்வீகமான ஆசாரியன் தானே, உன்னைக் கரங்களில் எடுத்து, எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்து, தேவனிடத்தில் உன்னை ஒரு ஜீவனாக சமர்ப்பித்தது யார்? அந்த வயதான தெய்வீக ஆசாரியன் தானே. 41அப்புறம் பார். நம் பட்டணத்தில் வணிகர்கள் இருக்கிறார்கள். யெகோவாவுக்கோ ஒரு ஆட்டுக்குட்டித்தேவை. இந்த வணிகர்களெல்லாம் வியாபாரிகள். அவர்கள் - அவர்கள் சந்தைகளில் வியாபாரம் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் ஆடுகளை வளர்ப்பதில்லை. ஆகவே, அவர்களிடம் ஆடுகள் கிடையாது. ஆகவே இந்த வணிகர்களும் தங்கள் ஆத்துமாவை சுத்திகரித்துக்கொள்ள ஆசாரியன் ஒரு வழியை உண்டுபண்ணியிருந்தார். அது என்னவென்றால், தேவனுடைய வார்த்தையின்படி ஆலயத்தின் பிரகாரத்திற்க்குள்ளே சிறு சிறு கடைகளை அவர்கள் கட்டி வைத்திருந் தனர். அதற்குள்ளாக ஆடுகளை விற்கிறவர்கள் ஆடுகளைக் கொண்டு வந்தனர். அப்பொழுது இந்த வணிகர்கள் யெகோவாவுக்குத் தேவையான தங்களுடைய ஆத்துமாவுக்கான ஒரு, பாவநிவாரண பலியைச் செலுத்த விரும்பும் இந்த மனிதன் அவர்கள் மேலே செல்லும் போது பலிக்காக இந்த ஆட்டை வாங்கிக்கொள்ளலாம். பாவநிவாரண பலிக்காக தேவையான ஆட்டை இங்கே ஆடு விற்பவர்களிடத்தில் வாங்கிக்கொள்ள முடியும். பின்பு இந்த நபர் அங்கே வந்த போது என்னதான் செய்தான்? அவன் அந்த கல்லாப் பெட்டிகளை கவிழ்த்துப்போட்டு அவர்களையெல்லாம் அடித்து விரட்டி விட்டான். ஒரு மனிதன் தேவனுடன் தன்னுடைய ஆத்துமாவை சரிபடுத்திக்கொள்ள முடியாதபடி தடை செய்ய இந்த மனிதன் முயற்சிக்கிறான். உங்களுடைய அருமையான, தெய்வீகமான வயதான ஆசாரியர்களைப் பார்த்து என்ன செய்தான் தெரியுமா? “அவர்கள் ஒரு கூட்டம் பாம்புகள், பிசாசினால் உண்டானவர்கள்” என்று சொன்னான். ஆவியின் கனி என்று சொல்லுகிறீர்களோ? அவர்கள் அவரை வெகுதூரத்திலேயே அடிக்க வேண்டியிருந்தது. 42ஆனால் ஒரு விசுவாசி என்பதற்கான சான்று என்ன? அது அந்த மணி நேரத்திற்கான அடையாளம் காணப்பட்ட வார்த்தையை விசுவாசிக்கும். அது அந்த வழியாகத்தான் எப்போதும் இருந்தது. ஜனங்களோ, எல்லாவிதமான பாரம்பரியங்கள், மதங்கள், ஸ்தாபனங்கள் மற்றும் கல்வி மற்றும் பிற காரியங்களால் இவைகளைக் குழப்பிப் போட்டு விட்டார்கள். ஆனால் தேவனோ தம்முடைய வார்த்தையோடு கூட கடந்து வந்து அந்த மணி நேரத்திற்கான அதை அவர் உறுதிப்படுத்துகிறார். அதுதான் சான்றாக இருக்கிறது. அவரை நோக்கிப் பாருங்கள். அவர், “நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யவில்லையென்றால் நீங்கள் என்னை விசுவாசிக்கத் தேவையில்லை. வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளில் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, நான் யாராய் இருக்கிறேனென்று அவைகளே என்னைக்குறித்து சாட்சிக் கொடுக்கின்றன. நான் என்ன செய்வேனென்று வேதவாக்கியம் கூறுகிறதோ அவைகளை நான் செய்யவில்லையென்றால், பின்பு நீங்கள் என்னை விசுவாசிக்கத் தேவையில்லை.” பாருங்கள்? ஆனால் இன்னுமாக அவர்கள் அறிந்து கொள்ள வில்லை. அவர்கள் அவ்வளவு காலம் அவரோடு நடந்திருந்தும் இப்பொழுது அவர் மறுபடியும் உயிர்த்தெழுந்து திரும்பி வந்து வேதவாக்கியங்களின்படி அது அவர்தான் என்று அவர்களிடத்தில் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருந்தார். 43உங்களுக்குத் தெரியுமா? இன்னமும் இன்றைக்கு, இயேசு மரித்தோரிடத் திலிருந்து உயிர்த்தெழுந்தப் பிறகு இந்தக் கடைசி காலத்தில் இந்த ஜனங்கள் மத்தியில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறார். அவர் பெந்தெகொஸ்தே குழு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட பொழுது சில வருடங்களுக்கு முன்பு அவர்கள், “அது போன்ற காரியம் அங்கு இல்லாதிருந்தது” என்றார்கள். இந்த பெந்தெகொஸ்தே சபை தான் உலகத்திலேயே மிக வேகமாக வளருகின்ற சபையாய் இருந்தது. அது அவர்கள் பெற்றிருந்த செய்தி. அது இப்பொழுது ஐம்பது வருடங்களாக இருக்கிறது. 'அது செய்யப்பட முடியாது“ என்று அவர்கள் கூறினர். ஆனாலும் அது செய்யப்பட்டது. அவர்கள், ”பரிசுத்த ஆவியா? அப்படி ஒன்றும் கிடையாது“ என்றனர்.ஜனங்களோ தொடர்ந்து சென்று அதைப்பெற்று கொண்டனர். அதேவிதமாகத்தான் இருக்கிறது. தேவன் தம்முடைய ஆவியை ஊற்றுவேன் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் அதைச் செய்வேனென்று வாக்குத்தத்தம் செய்திருக்கும்போது, நீங்கள் எப்படி அதை இப்பொழுது தடுக்கப் போகிறீர்கள். அவர்கள், ”யாருமே அதை விசுவாசிக்க மாட்டார்கள்“ என்று கூறினர். ஆனாலும் அவர்கள் அதை விசுவாசித்தனர். “தேவன் இந்தக் கல்லுகளிலிருந்து தம்முடைய வார்த்தையை விசுவாசிக்கூடிய பிள்ளைகளை ஆபிரகாமுக்கு உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்.” 44அவர்கள் தொடர்ந்து கடந்து சென்றனர். அவர்கள் தேசத்தில் உள்ளதிலேயே மிகவும் வல்லமையுள்ள சபையாக மாறினர். நம்முடைய ஞாயிறு விருந்தினராகிய, அந்த கத்தோலிக்க விருந்தினர், சமீபத்திலே “பெந்தெகொஸ்தே சபைதான் எல்லா ஸ்தாபனங்களிலும் மிக வேகமாக வளரும் சபை” என்று கூறினார். அவர்களுடைய சபையே அதைக் குறித்து, அவர்களுடைய சபை, கடந்த வருடத்திலே பத்து இலட்சம் ஆத்துமாக்களை வழிநடத்தியது என சாட்சி கூறியது. ஆனால் பெந்தெகொஸ்தே சபையோ பத்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் மனம் மாறியதாக அவர்கள் கூறினர். அவர்கள், என்னுடையது மற்றும் ராபர்ட்ஸ் அதைப்போன்று, அதைப்போன்று அந்த மற்ற கூட்டங்களைச் சேர்க்காமல், பாருங்கள். அதுவும் இரட்சிக்கப்பட்டு அவர்கள் சபைகளில் அங்கத்தினர்களாக சேர்க்கப்பட்டவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இந்த இதுபோன்ற இந்த சுவிஷேச கூட்டங்களிலே சிலருக்கு எந்த சபையிலே போய்ச் சேருவதென்றே தெரியாமல் சிலர் போய்விடுகிறார்கள். ஆனால் அந்த பெந்தெ கொஸ்தே கூட்டங்களிலே ஒரு வருடத்திலே பத்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் இரட்ச்சிக்கப்பட்டதாக அவர்கள் அதை கணக்கெடுத்துள்ளார்கள். கத்தோலிக்க சபையே அதைக்குறித்து சாட்சி கொடுக்கிறது. பாருங்கள்? அவர்கள், அப்படிச் செய்ய முடியாது, என்று கூறினர். ஆனால் இப்பொழுதோ பிரஸ்பிடேரியன்களும், மெத்தொடிஸ்டுகளும் மற்றும் பாப்டிஸ்டுகாரர்களும் அதற்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெந்தெகொஸ்தேகாரர்களோ இந்த மணி நேரத்தைக் காணக்கூடாதவாறு அவர்கள் அவ்வளவு குருடாயிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியாதா? அந்த ஏழாம் ஜாமத்திலே அந்த உறங்கிக்கொண்டிருந்த கன்னிகைகள் மற்ற கன்னிகைகளைப் பார்த்து, “வாருங்கள், உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொஞ்சம் தாருங்கள்” என்று கேட்டார்களே, அதற்கு அந்த மற்ற கன்னிகைகள் “எங்களுக்கு போதுமானதுதான் எங்களிடம் இருக்கிறது” என்று கூறி னார்கள். அவர்கள் சொன்னபோது, அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அதை வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது அந்த மணவாளன் வந்துவிட்டார். அவர்கள் உள்ளே பிரவேசித்துவிட்டனர். அங்கேதான் நாம் இருக்கிறோம். பாருங்கள்? 45“மேலும் புத்தியில்லாதவர்களே; இந்த நாளைக் குறித்து வேதவாக்கியங்கள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்கும்; 'நாங்கள் ஐசுவரியவான்களாயிருக்கிறோம், எங்களுக்கு ஒரு குறைவுமில்லை' ஆகையால் இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் சபையை விட்டு அவர் வெளியே தள்ளப்பட்டதைக் குறித்து விசுவாசிக்கிற தற்கும், மந்த இருதயமுள்ளவர்களே” என்று அவர் மறுபடியும் கூறலாமா? “நல்லது, அந்த பெந்தெகொஸ்தே அசைவு நாங்கள் உலகத்திலேயே ஐசுவரியமான ஸ்தாபனங்களிலேயே நாங்கள் ஒரு ஸ்தாபனம். ஓ, என்னே! நாம் ஒரு காலத்திலே எங்கோ ஒரு சந்துகளிலே இருந்திருப்போம், ஆனால் சகோதரனே, அவள் இன்றைக்குத் தெருவின் முனையிலேயே இருக்கிறாள். மிகச்சிறந்த சபைகள், அருமை யான வேதாகமக் கல்லூரிகள் நாங்கள் ஒரு கட்டிடத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறோம் அது ஐம்பது மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கட்டிடம். சரியாக இப்பொழுதே பாருங்கள். இன்னும் அதுபோன்ற காரியங்கள், பெரிய மகத்தான காரியங்கள், ஐசுவரியம்!” 46ஆனால் அப்பொழுதுதான் வாக்குத்தத்தை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். நீங்கள் பாரம்பரியங்களுக்கு ஆரம்பிக்கிறீர்கள். அந்த காரணத்தினால்தான், அவர் தம்மை அடையாளப்படுத்த இங்கே அவர் வரும் போது, ஜனங்கள் முற்றிலுமாக தங்களுடைய கல்வி, தங்களுடைய தத்துவம், மற்றக் காரியங்கள் அவைகளிலே மரத்துப்போய்க் காணப்படுகிறார்கள். அவர்கள் தேவனுடைய கட்டளைகளை பாரம்பரியங்களுக் குள்ளாக மாற்றிப்போட்டு விட்டார்கள். நீங்கள் நின்று அவர்களிடம் பேசுகிறீர்கள், அது போய்ச் சேர்வதே இல்லை. அது திரும்பி வந்துவிடுகிறது. இப்பொழுது ஆனால் அதுவே, ஒருவேளை நன்றாக, வெகுவாக மெருகேற்றப்பட்டு, ஒரு பெரிய பேராயர் அல்லது ஒரு சிலர் அதை ஏதோ ஒருவிதமான விதத்தில் கொண்டு வருவாரென்றால், நல்லது, அவர்கள் - அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் பாருங்கள், அது ஒருபோதும் அந்த விதமாக வந்ததில்லை . சில ஸ்தாபனங்கள் முழுவது மாக அதற்காகச் செல்லுமானால் அது அருமையாக இருக்கும். ஆனால் அவர் அதை ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை, அவர் அதை ஒருபோதும் செய்ததில்லை. அவர் காய்பாவோடே வந்திருந்து, இவ்விதமாக காய்பா “இப்பொழுது, நான்தான் மேசியா இப்பொழுது வரவேண்டியவராய் இருக்க வேண்டியவர் நான் தான்” என்று சொல்லியிருந்தால். பாருங்கள், அவர்கள், “ஓ, மகத்தான பரிசுத்த தந்தையே, நீர்தான் அந்த மேசியா” என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் பாருங்கள். அது அந்த மேசியாவை அடையாளம் காட்டவில்லை. அவருடைய - அவருடைய மத உரிமைகள், அவரை மேசியாவாக ஆக்கவில்லை, அவர் வேதாகமம் கூறின் அடையாளமாக இருந்தார். அது அவரை மேசியாவாக ஆக்கும். அவரை அவர்தாமே மேசியாவாக ஆக்கும் என்று வேதம் சொன்ன அடையாளமாக இருந்தார். மறுபடியும் இன்று காரியம் அதுவாகத்தான் இருக்கிறது. நம்முடைய ஸ்தாபனங் களல்ல, நம்முடைய கோட்பாடுகளல்ல, ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது எதுவாக இருக்கிறதோ, அதுதான். இப்பொழுது கவனியுங்கள். 47இப்பொழுதும் அதேதான். நாம் நம்மை அதே வழியில்தான் புகுத்திக் கொள்கிறோம். இன்னுமாக நாம் கோட்பாடுகள், ஸ்தாபனங்கள், மற்றும் உலகக் கல்வி இன்னும் அது போன்ற காரியங்களை விசுவாசிக்கிறவர்களாய் இருக்கிறோம். ஏன் தெரியுமா? பெரும்பாலான நம்முடைய சபைகள் ஒரு களத்திற்கு அனுப்பும் முன்பு அவர்களுடைய புத்திக் கூர்மையானது ஒரு மிஷனரியாக இருப்பதற்குப் போதுமான உயர்ந்ததாக இருக்கின்றதா என்று பார்ப்பதற்கு அவர்கள் மனோதத்துவ நிபுணரிடம், மனோதத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற யோசனையை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர் அது வேதவாக்கியத்திற்கு முரண்பட்டதாயிருக்கிறது. பேதுரு கல்லாதவனும், ஒன்றும் அறியாத மனிதனுமாய் இருந்தான் என்று வேதம் கூறுகிறது. அவன் தன்னுடைய பெயரைக் கையொப்பமிடக் கூட முடியாதவனாய் இருந்தான். ஆனால் அப்படிப்பட்டவனுக்கு, பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல் களைக் கொடுப்பதற்கு தேவனுக்குப் பிரியமாகக் காணப்பட்டது. ஏனென்றால் அவன் மேசியாவைக் கண்டு அவருடைய ஆதாரங்களை அடையாளம் கண்டு, அறிந்து கொண்டு அவருடைய பாதத்தில் விழுந்து அவரை மேசியாவாக அடையாளம் கண்டுகொண்டான். அவன் வார்த்தையை விசுவாசித்தான். “மேலும் நீ பேதுருவாய் இருக்கிறாய், நான் உனக்குக் கூறுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்” பேதுருவின் மேல் அல்ல. இயேசுவின் மேல் அல்ல, அவர் யாராய் இருக்கிறார் என்ற அவனுடைய ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் கட்டுவேன் என்றார். அதே காரியத்தைத்தான், அவர் ஆபேலுக்குச் செய்தார். “விசுவாசத்தினால் ஆபேல், காயீனைக்காட்டிலும் மேன்மையான பலியைச் செலுத்தினான்.” இரண்டு பையன்களும் பலியைச் செலுத்தினார்கள். இரண்டு பையன்களும் ஜெபத்தை ஏறெடுத்தார்கள், இரண்டு பையன்களும் பலிபீடத்தைக் கட்டினார்கள், இரண்டு பையன்களும் அதே தேவனைத்தான் தொழுதுகொண்டார்கள். பாருங்கள்? ஒன்று ஏற்றுகொள்ளப்பட்டது. மற்றொன்றோ புறக்கணிக்கப்பட்டது. ஏனென்றால், வெளிப் பாட்டினாலே, ஏதேன் தோட்டத்திலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்தது, பழங்களோ, ஆப்பிள் களோ அல்ல என்பதை வெளிப்பாட்டினாலே ஆபேல் கண்டான். அது இரத்தமாய் இருந்தது. அவனும் அந்த இரத்தத்தையே பலியாகச் செலுத்தினான். தேவனும் அதை ஏற்றுக்கொண்டார். 48பாருங்கள், மேலே மகத்தான ஸ்தபனமாகிய மோவாபை நோக்கிப்பாருங்கள். அதே தேவன், அங்கே பிலேயாயாகிய அந்தப் பேராயர், வந்து இஸ்ரவேலிலே எப்படிக் கட்டுவார்களோ அதே போல ஏழு பலிபீடங்களை அவன் வெளியே கட்டினான். கிறிஸ்துவின் வருகையைக் குறித்துப் பேசிக்கொண்டு சுத்தமான ஏழு பலிகளாகிய காளைகளும், ஏழு ஆட்டுக்கடாக்களும் உடையவர்களாய் இருந்தனர். அடிப்படையில் இரண்டு பேரும் சரியாகவே இருந்தனர். ஆனால் தங்கள் கடமையைவிட்டு ஓடிப்போய் அலைந்து திரிந்துகொண்டிருக்கிற இந்த கூட்டத்தை நோக்கிப் பாருங்கள். தங்கள் தரை வழியாகக் கூட அந்த ஜனங்களைப் போக அவர்கள் அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அங்கே ஒருவிதமான எழுப்புதலைக் கொண்டிருப்பார்கள் என அவர்களுடைய போதகருக்கு பயமாய் போயிற்று. ஆகவே தங்கள், தரை வழியாக கூடப்போக அனுமதிக்கவில்லை. அவர்களுடைய சகோதரர்களாகிய இஸ்ரவேலர் தங்களுடைய வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த வழியிலும். அவர்கள் தங்களுடைய ஊர் வழியாகக்கூட போக அவர்கள் அனுமதிக்க வில்லை . சரி. அவன். அந்த அடிக்கப்பட்ட கன்மலையை, வெண்கல சர்ப்பத்தை மற்றும் பாளையத் திலிருந்த ராஜாவின் ஆர்ப்பரிப்பை பிலேயாம் பார்க்கத் தவறினான். இவர்கள் மத்தியிலி ருந்த தேவனுடைய அடையாளத்தைக் காண அவர்கள் தவறினர். இரு ஜனத்தாருக் கும் தீர்க்கதரிசிகள் இருந்தனர். பிலேயாம் அங்கேயும், மோசே இங்கேயும் இருந்தனர். ஆனால் மோசேயோ வார்த்தையோடு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருந்தான். அதுதான் அங்கு வித்தியாசம். இரண்டு பேரும் மகத்தான தீர்க்கதரிசிகள். ஆனால் இந்த மனிதனோ, வார்த்தையோடு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருந்தான். அது இருந்தது போல ஒரு வல்லமையான தேசத்தை உடையவனாக அவன் இருக்க வில்லை. ஆனால் அவன் வார்த்தையோடு தன்னை அடையாளம் கண்டுகொள்ளப் பட்டிருந்தான். மேலும் அதற்கான சான்றுகளையும் உடையவனாயிருந்தான். ஆமென். அதுதான் உண்மையான, விசுவாசிக்கும் கூட்டம். கிறிஸ்து நம்முடனே, கிறிஸ்து நமக்குள்ளே இருப்பதாகும், ''கொஞ்சக் காலம் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக் குள்ளும் இந்த உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடிருப்பேன்“ என்றார். கவனியுங்கள். 49துரிதமாக, இப்பொழுது நினைவு கூருங்கள், அவர்கள் அதைக் காணத்தவறி விட்டனர். இல்லை, அவர்கள் அது எப்படியிருக்குமென்று அதைப் புரிந்துகொள்ள வில்லை, அது எவ்வாறு கூடும்? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது, அவர்களுடைய காலத்துக்குரியதாயிருந்தது. அவர்தான் அந்த வாக்குத்தத்தின் நிறை வேறுதலாய் இருந்தார், இருந்தும், அவர்கள் அதைக் காணத்தவறினர். ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் உண்மையான அடையாளம். அவர் என்ன செய்தா ரென்று கவனியுங்கள். மேலும், அவர்கள். இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் சீக்கிரமாய்ச் சென்று விட்டார்கள். அவன் தொடர்ந்து, 'நீர் அந்நியரோ, நாசரேத்தூரனாகிய இயேசுவைக் குறித்து உமக்கு தெரியாதோ, அவர் உண்மையில் ஒரு பலமுள்ள தீர்க்கதரிசியாக தேவனுக்கு முன்பாகவும், மக்களுக்கு முன்பாகவும் இருந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியென்று நாங்கள் விசுவாசித்து அறிந்திருக்கிறோம்“ எனக் கூறினான். அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டவுடனே அவரைக் கவனியுங்கள். அவர் தொடர்ந்து, 'நடந்த இந்த காரியங்க ளெல்லாம் என்ன? என்ன நடந்தது?“ எனக்கேட்டுக் கொண்டிருந்தார். “நசரேயனாகிய இயேசு, ஒரு தீர்க்கதரிசி, தேவனுக்கும், மனிதனுக்கும் முன்பாக பெரியவராயிருந்தார். இஸ்ரவேலுக்கு விடுதலையை கொண்டு வருகிறவரும், அவராகத் தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்பியிருந்தோம்” என்று அவர்கள் சொன்னார்கள். 50அவரை ஒரு தீர்க்கதரிசியென்று அவர்கள் ஒத்துக்கொண்ட உடனே கவனியுங்கள். உடனடியாக அவர் வார்த்தைக்குச் சென்றார். ஒரு ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் மெய்யான அடையாளம். ஒரு மெய்யான தீர்க்கதரிசி எப்பொழுதும் வார்த்தைக்குத்தான் செல்வான். ஏனென்றால் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்திற்கு வருகிறது. பாருங்கள்? அவன் (அங்கேதான்) செல்லுகிறான். அவன் என்ன செய்தான் என்று கவனியுங்கள். அவர்கள் அவனிடத்தில் அவர்கள் ஒரு தீர்க்கதரிசியென்று விசுவாசித்து இருந்ததாக, சொல்லியிருந்தார்கள். இப்பொழுது, வார்த்தையோடு தன்னை அடையாளம் காட்டி ஒரு தீர்க்கதரிசியாவதற்கு அது ஏற்றதாயிருக்கிறது. ஏனென்றால், கர்த்தருடைய வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசி யினிடத்தில் வருகிறது. அந்த பழைய டாக்டர்.டேவிஸ், இங்கே உட்கார்ந்திருக்கிறாரா பாருங்கள். அவர் இங்கே இருக்கிறாரா இல்லையா என எனக்குத் தெரியாது. அவர் இங்கே கீழே புளோரிடாவில் எங்கேயோ இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு அவர்கள் என்னிடம் கூறியிருந்தனர். டாக்டர்.டேவிஸ், நீங்கள் இங்கு இருப்பீர்களா னால், மிஷனரி பாப்டிஸ்ட் சபையில், அவர்தான் என்னை ஊழியக்காரனாக அபிஷேகம் செய்தார். வேதவசனங்களின் பேரில் நாங்கள் வழக்கமாக விவாதிப்போம். யோவான் ஸ்நானகன் இயேசுவுக்கு முதலாவதாக ஞானஸ்நானம் கொடுத்தாரா... அல்லது இயேசு யோவானுக்கு முதலாவதாக ஞானஸ்நானம் கொடுத்தாரா என்று அவர் கேட்டார். ஏனென்றால் யோவான் ஒருபோதும் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. மேலும் அவன் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தான். வேறுயாருமே அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க பாத்திரவான் இல்லை. ஆகவே இயேசு யோவானுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்“ என்று கூறினார். நல்லது, ”அவன் அவருக்கு இடம் கொடுத்தான்“. நல்லது, அவர் அதை எப்படிச் செய்தார், அது என்னால் என் மனதில் நியாயமானதாக தெரியவில்லை. அதற்கு வேதவசனத்தை என்னால் காண்பிக்க இயலாது. ஒரு நாளில் நாங்கள் தனிமையில் இருந்தபோது, அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் அங்கு பிரன்னமானார், அவர் அதை எனக்கு வெளிப்படுத்தினார். 51பாருங்கள் இப்பொழுது கவனியுங்கள். இயேசு வார்த்தையாக இருந்தார். யோவான் தீர்க்கதரிசியாக இருந்தார். அங்கே மகத்தான இரண்டுபேர் பூமியில் இருந்தார்கள். தேவனும் அவருடைய தீர்க்கதரிசியும், வார்த்தை தேவனாக இருந்தது, தீர்க்கதரிசியினிடத்திற்கு வருவதற்கு, அது எப்பொழுதுமே வார்த்தையாகவே இருந்து ள்ளது. யோவான் அந்த தீர்க்கதரிசியாக இருந்தார். மேலும், இங்கே வார்த்தை நேராக தண்ணீருக்குள் நடந்து தீர்க்கதரியினிடத்திற்கு வருகிறது. அந்த வார்த்தை தீர்க்கதரிசி யினிடம் தண்ணீருக்குள்ளாக வந்தது. ஆமென். நான் பக்தி பரவசமடைகிறேன். வார்த்தை முற்றிலுமாக தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. மேலும், இங்கே வார்த்தை யானது ஜீவிக்கும் வடிவத்தில் இருந்தது, இங்கே தீர்க்கதரிசி தண்ணிரில் நின்று கொண்டிருக்கிறார். அந்த வார்த்தையானது தீர்க்கதரிசியினிடமாக வருகிறது. அவர்களு டைய கண்கள் ஒன்றை ஒன்று சந்திக்கிறதை என்னால் பார்க்க முடிகிறது. யோவான் மேலே நோக்கிப்பார்க்கிறான். வானம் திறக்கப்பட்டிருப்பதை அவன் காண்கிறான் அந்தப் புறா அக்கினிமயமான சிறகுகளுடன் கீழே இறங்கி அதன்மீது வருகிறது. அதிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு, “இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” என்று கூறியது. 52யோவான் பார்த்த போது, அவர் மேல் அந்த ஒளியைப்பார்த்தான், அது என்னவாயிருந்தபோதிலும் முதலாவதாக, அவன் அந்த ஆற்றிற்கு நடந்து வந்தபோது “இதோ உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அவன் கூறினான். அவன் பரிபூரண அக்கறையுள்ளவனாய் உண்மையான விசுவாசமுடையவனாய் இருந்தான். அவன், “உங்கள் மத்தியில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார், அவருடைய பாதரட்சையை சுமப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று கூறினான். அவர் தன்னுடைய நாளில்தான் வரவேண்டும் என அறிந்திருந்தான். ஏனென்றால் அவன்தான் அவருக்கு முன்னோடியாயிருந்தான். அவன், “நீங்கள் அறியாத ஒருவர் இப்போது உங்கள் மத்தியில் இருக்கிறார். அவரை நீங்கள் அறியவில்லை. ஆனால் நான் அவரை அறிந்தி ருக்கிறேன். இந்த நாட்களில் ஒன்றில் அந்த அடையாளம் அவரை அடையாளம் காட்டும் பொழுது நான் அவரை அறிவேன்” என்று கூறினான். அதன்பிறகு ஒரு நாளிலே இயேசு அங்கே நடந்து வந்தார். “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியென்று” அவன் கூறினான். இயேசுவாகிய அந்த வார்த்தை சரியாக தீர்க்கதரிசியிடம், தண்ணீருக்குள் நடந்து வந்தது. யோவான் அவரைப் பணிவுடன் நோக்கிப் பார்த்தான், அவன், நான் உம்மாலே ஞானஸ் நானம் பண்ணப்பட வேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் ஏன் வந்தீர்? என்று கேட்டான். 53இப்பொழுது இதை கவனியுங்கள். வார்த்தையும், தீர்க்கதரிசியும், ஒருசேர இணைகிறதைப் பாருங்கள். தீர்க்கதரிசியானவன் வார்த்தையை அறிந்திருக்க வேண்டி யவனாய் இருந்தான். ஏனென்றால் வார்த்தை அந்த தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப் பட்டிருந்தது. ''அவன் மேசியாவை அறிமுகப்படுத்துவான்“ என்கிறதான அவனுக்குரிய தீர்க்கதரிசனம் அப்பொழுது அங்கே நிறைவேறியது. மேலும் இங்கே அந்தத் தீர்க்கதரி சியும் அந்த வார்த்தையும் ஒன்றாயிருந்தனர். மேலும் அவன், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டியிருக்க நீர் என்னிடத்தில் ஏன் வந்தீர்?” என்று கூறினான். இயேசு சரியாக அவன் முகத்தைப் பார்த்து, இப்பொழுது இடம் கொடு இவ்வாறாக எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது, என்று கூறினார். அவன் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது, பாருங்கள், அது என்னவாக இருந்தது. இயேசு, “ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிற உனக்குத் தெரியும், நான் ஒரு பலியாக இருக்கிறேன். ஒரு பலியானது அது பலியாக செலுத்தப்படுவதற்கு முன்பாக அது கழுவப்பட வேண்டும்” என்றார். ஆமென். ஆமென். ஆகவே வார்த்தை பயான்றும் ஒரு பலியானது அது பலியாக சரியாக தீர்க்கதரிசியினிடத்தில் எப்பொழுதுமே வருகிறது. அவனும் அவருக்கு இடம் கொடுத் தான். அவன், ''அது சரியாக இருக்கிறது“ என்று கூறினான். “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. நான் பலியாக இருக்கிறேன். நான் கழுவப்படவேண்டும். அது சரியே. நீ எனக்கு ஞானஸ் நானம் கொடுக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. ஆனால் இப்படி நடக்கும்படி இப்போதைக்கு இடம் கொடு. ஏனென்றால் இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டும்.” அது உனக்கும் எனக்கும் ஏற்றதாயிருக்கிறது என்றார். அல்லேலூயா! தேவனுடைய செய்தியுடன் பெந்தெகொஸ்தே மக்களாக இருக்கிற புருஷர்களே, ஸ்திரீகளே நாம் அப்படிப்பட்ட எல்லா நீதிகளையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது. நாம் எல்லா நீதிகளையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது. 54கவனியுங்கள். ஒரு தீர்க்கதரிசியானவன், நேராக வார்த்தையினிடமாகச் செல்லுகிறேன், அவர்கள், 'நசரேயனாகிய இயேசு, அவர் தீர்க்கதரிசியாய் இருந்தார் தேவனுக்கும், மனிதனுக்கும் முன்பாக அவர் செயலிலே வல்லவராய் இருந்தார்“ என்று கூறினார்கள். அப்பொழுது அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்திருப்பாரென்றால், அவர் அடையாளம் காணப்பட்டிருப்பாரென்றால், அவர் என்னவாயிருக்கிறாரென்று உரிமை கோரிக்கொண்டிருந்தார்களோ, அவர் சரியாகப் பின்பாகச் சென்று அதே வார்த்தையை எடுத்துக்கொண்டார். இதைத் தவற விட்டுவிடாதீர்கள். அவர்கள் என்ன வாக இருக்க வேண்டுமென்று அவர்கள் அழைத்தார்களோ, சரியாக அந்த எழுதப்பட்ட வார்த்தையை எடுத்து, அவர் அதுவாகவே இருக்கிறார் என்பதை அடையாளம் காட்டினார். ஆனால் அவர்களால் அதைப் பிடித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அவரைத் தீர்க்கதரிசி யென்று அழைத்தார்கள். ஆம், அவர் அங்கே ஒரு தீர்க்கதரிசியாகத்தான் இருந்தார். மேலும் சரியாக அந்த வார்த்தையினிடத்தில் சென்று, அந்த வார்த்தையை எடுத்து அவர் தன்னுடைய சொந்த ஊழியத்தை அடையாளம் காட்டினார். மேலும் அவர்கள், “அது - அது ஒரு நல்ல செய்தி! அதெல்லாம் சரி. எங்கள் இருதயம் கூட எங்களுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது” எனக் கூறினார். அது அதுவாகத்தான் இருந்தது. ஆனால் அது அதுவாகத்தான் இருந்தது. நாமும் அதேபோல் செய்வோமா என்று. ஆச்சரியப்படுகிறேன் நாம் அப்படித்தான் செய்வோம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதுசரி. நாம் அவ்விதமாகத்தான் செய்வோம் கவனியுங்கள். ஓ, என்னே! ஒரு உண்மையான தீர்க்கதரிசியின், அடையாளம்! எப்போதும் அது வார்த்தையினிடத்திற்கு நடத்துகிறது! அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடிய வில்லை என்றாலும். அவர். அவருடைய போதகம் மிகச்சிறந்ததாக இருந்தது. மேலும் என்னே! ஓ, என்னே! இந்த நேரம் எப்படிப்போனதென்றே தெரிய வில்லை. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள்தான் முடிப்பதற்கு உள்ளது. கவனியுங்கள். எனக்கு, எப்படி அந்த நாற்பத்தைந்து நிமிடங்கள் அவ்வளவு சீக்கிரமாய்க் கடந்து போயின என்று புரியவில்லை . 55கவனியுங்கள். இங்கே பாருங்கள். அவர்கள் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும், உங்களால் அது முடியாமல் போனாலும், தயவு செய்து அவர்கள் என்ன செய்தார்களோ அதையே நீங்களும் செய்யுங்கள். அவர்கள் அவரை உள்ளே வரும்படியாக அவரை வரவேற்றார்கள். அவர்கள் கூறினர், “உள்ளே வாருங்கள். பொழுது சாய்ந்து விட்டது. உள்ளே வாருங்கள்.” அதுதான், அதுதான், அப்பொழுதுதான், அதன் பிறகுதான், நீங்கள் அவரை உள்ளே வாருங்கள் என்று அழைக்கும்போதுதான், அவர் உங்களுக்கு தம்மைக் காண்பிக்க முடியும். நீங்கள், ''எனக்கு அது புரியவில்லை . எப்படி இந்தக் காரியங்களெல்லாம், இந்த நாளிலே சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறதென்று, வார்த்தையிலேயே விவரமாக எனக்குக் கூறப்பட்டதை நான் கேட்டிருக்கிறேன், என்னால் - என்னால் என்னால் - என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இன்னுமாக, “கர்த்தராகிய இயேசுவே உள்ளே வாரும்” என்று அவரை அழையுங்கள் அதே காரியத்தை நீர் என்று இப்பொழுதே செய்யக்கூடாது. பாருங்கள். “உள்ளே வாரும்” என்று கூறுங்கள். எப்படி, இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் கூறிய பிறகு, அவர் அவர்களை விட்டு அப்படியே கடந்து போவதுபோல காண்பித்தார். அவர் உங்களிடத்தில் அப்படி காண்பிக்க வேண்டியவராய் இருக்கிறார். ஆனால், அவரை நீங்கள் வரவேற்கும்போது, அவர் அப்படிச் செய்யமாட்டார், அவர் போகமாட்டார். போகிற போய்க்கொண்டு அப்புறம் போகிறவர் போல அவர்களுக்குக் காண்பித்தார். “இன்றிரவு, அது மிகவும் பொழுதாகி விட்டது. இப்பொழுது நீர் எங்களோடு கூட வந்து தங்கும்” என்று கூறினார்கள். ஆகவே, அவர் திரும்பிப் பார்த்து, “சரி நான் உள்ளே வருகிறேன்” என்றார். ஆகவே அவர் உள்ளே சென்றார். இப்பொழுது அதுதான் முக்கியமான காரியம். உங்களால் அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ள முடியாதிருந்தாலும் பரவா யில்லை. அது உங்களுக்கு அது மிக, மிக ஆழமாக அல்லது வேறு ஏதோவொன்றாக இருக்கிறது. நீங்கள் அதைப்புரிந்து கொள்வதில்லை. நீங்கள் முழுவதும் வித்தியா சமான பிரமாணங்களால் நிறைந்திருக்கிறீர்கள், இது அதைக் கூறுகிறது, அது இதைக் கூறுகிறது என்கிறீர்கள். உங்கள் தாழ்மையான சிந்தைக்கு, நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று என்ன நினைப்பதென்றே தெரியவில்லை. நான் உங்களுக்குச் சொல்லுவேன். அவர்கள் என்ன செய்தார்களோ, அதையே நீங்களும் செய்யுங்கள். அவரிடத்திலே, “ஆண்டவரே உள்ளே வாரும். இன்றிரவு எங்களோடு கூட தங்கும் என்று சொல்லுங்கள், ஆண்டவரே உள்ளே வாரும் என்னோடே தங்கியிரும் என்று சொல்லுவீர்களா? 56அவர் அங்கே உள்ளே போனபோது, அவர்கள் கதவை சாத்திக்கொண்டனர். அவர் இப்பொழுது எப்படிச் செய்தார் என்று. கவனியுங்கள். வார்த்தை பிரசங்கிக்கப்பட்டும் செய்யக்கூடாததை, பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையும், அடையாளப்படுத்தப்பட்ட வார்த்தையையும் வைத்து அவர் தன்னை எவ்விதமாய் தெரியப்பண்ணினார் என்பதைக் கவனியுங்கள். அவர்கள், அவரை ஒரு தீர்க்கதரிசியென்று உரிமை கோரினார். அவர்கள் தாங்களும் அவருடைய சீஷர்கள் என்று தங்களை உரிமைகோரிக் கொண்டனர். அவர் அவர்களிடத்தில் பேசினார். இன்னுமாக அவர்கள் அவரை, பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையினாலே புரிந்துகொள்ள முடியவில்லை. இல்லை ஐயா, அவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் உள்ளே வந்தபோது, அவர் தான் யாரென்பதை காணும்படி அவர்கள் கண்களைத் திறந்தார். அவர் அவர்கள் கண் களைத் திறந்தார். அவர் எப்படி அதைச் செய்தார்? அவர் சிலுவையில் அறையப்படும் முன் செய்தது போன்று சில காரியத்தைக் கொண்டு அவர் செய்தார். அவர் அவர்களுடைய கண்களைத் திறந்தார், மேலும் அவர் செய்து முடித்த அல்லது நிறைவேற்றிய சில காரியங்களை அதாவது அவர் செய்கிறதை அவர்கள் பார்த்தனர். மேலும் அவர் - அவர் மாத்திரமே அதை செய்கிறார். அவர் மற்றெல்லா மனிதர்களிடத்திலிருந்து வித்தியாசமானவராக இருக்கிறார். நீங்கள் ஒருவிசை அவரை பார்த்திருப்பீர்களென்றால் அங்கே - அங்கே... எந்தவொரு மனிதனும் அவர் செய்தது போல் செய்யமுடியாது. பாருங்கள்? அவர் செய்கிறவித மாக, அவர்கள் அதைச் செய்கிறதில்லை . அவர் அதை எப்பொழுதும் அந்த விதமாக த்தான் செய்கிறார். அவர் மாறுவதேயில்லை . எபிரேயர் 13:8-ஆம் வசனம் சரியாகத்தான் இருக்கிறது. “அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” 57ஒரு விசை அவர் உள்ளே வந்த போது, அங்கே அவர்களுக்குள்ளாக, அவர்களோடுகூட உள்ளே பிரவேசித்தபோது, அவர் தான் எப்பொழுதும் வழக்கமாக செய்கிற, ஒரு காரியத்தை, அதேபோல் செய்ததன் மூலமாக தான் யாரென்பதை அவர்களுக்கு காண்பித்தார். அந்தக் கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீக்கு அவர் செய்தது போலவேதான் செய்தார். கவனியுங்கள். அங்கே அவள் வருகிறாள். மிகவும் ஆணவம் கொண்ட பெண்ணாக. உருவத்தில் சிறிய தோற்றமுடைய ஒரு நடத்தைக் கெட்ட பெண்ணாக. அனேகமாக, பாவம் அந்த ஸ்திரீ சிறிய பிள்ளையாய் இருக்கும் போது, எப்படியாவது வாழட்டும் என்று தெருவில் திசை திருப்பப்பட்டிருக்கிறாள். ஆனால், சரியாக அங்கே அவள் இருதயத்திற்குள்ளாக அங்கே ஒரு முன்குறிக்கப்பட்ட வித்தானது கிடந்தது. ஆனால் அங்கிருந்த ஆசாரியர்கள் மற்றும் ஒவ்வொருவருக்கும் கல்வியிருந்தது. ஒரு - ஒரு கணிப்பு (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்). துவக்கத்திலேயே அவர் அவ்விதம் கூறினார். ஆனால் இந்த சிறிய பெண்ணோ , அவள் வாழ்க்கை முழுவதுமாக களங்கப்பட்டிருந்தான். இங்கு எங்கோ ஒரு சிறுதுளி வெளிச்சம் இருந்தது. ஆனால் தூரத்தில் எங்கோ ஆழத்தில் ஒரு விதையானது காத்துக்கொண்டிருந்தது. பாருங்கள்? மேலும், ஒரு வெளிச்சமானது எந்த அளவுக்கு ஒரு விதையின் மீது படுகிறதோ, நிச்சயமாக அது அதை உயிர்ப்பிக்கச் செய்கிறது. அந்த விதை ஜீவிக்கிறது. 58ஆகவே, அவள் அங்கே வருகிறாள். ஒருவேளை அவள் வேலையின் நிமித்தம் சற்று தாமதமாயிருக்க வேண்டும். மற்ற பெண்களோடு சேர்ந்து அவளால் வரமுடிய வில்லை. எப்படியோ, அவள் சிறிய அழகான பெண்ணாயிருந்திருக்க வேண்டும். அவள் தண்ணீர்க் குடத்தை எடுத்துத் தோளின் மீது வைத்து அங்கு வருகிறாள். அவள் அங்கே நடந்து வந்து, அந்தக் குடத்தைக் கயிற்றிலே கட்டி, கிணற்றுக் குள்ளாக இறக்கிக் கொண்டிருக்கிறாள். தாகத்துக்குத் தா! என்று தன்னிடமாக கேட்ட ஒரு மனிதனுடைய சத்ததைக் கேட்டு அவள் திரும்புகிறாள். அவர் அவளிடத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அவளிடம் போய், “உன் புருஷனை கூட்டிக்கொண்டு இங்கே வா” என்று கூறினார். இப்பொழுது, பாருங்கள், உள்ளுக்குள்ளாக அது மேசியாவின் அடையாளம் என்று அவள் அறிந்திருந்தாள். “எனக்குப் புருஷன் இல்லை ” என்று அவள் அவரிடத் தில் கூறினாள். “நீ சரியாகச் சொன்னாய். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருப்பவன் உன் புருஷன் அல்ல” என்றார். அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசியென்று காண்கிறேன். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, எங்களுக்கு தீர்க்கதரிசியேயில்லை. நீர் ஒரு தீர்க்கதரிசியென்று காண் கிறேன். இப்பொழுது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்த கிறிஸ்துவை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அபிஷேகிக்கப்பட்ட மேசியா. வரும்போது, சரியாக அவர் அவ்விதமாகத்தான் இருப்பார்” என்றான். இப்பொழுது பாருங்கள். “உன்னிடத் தில் பேசுகிற நானே அவர்” என்று அவர் கூறினார். சரியாக நகரத்திற்குள் அவள் சென்றாள். அவர்களுடைய சட்டத்தின்படி அப்படிச் செய்வதற்கு அவளுக்கு அதிகாரமில்லை . அதுவும் அப்படிப்பட்ட ஒரு பெண். புருஷர்கள் யாரும் செவிகொடுக்க மாட்டார்கள். அவளைத் தடுத்து நிறுத்த முயற்சிக் கிறீர்களா? காற்றில் நெருப்பில் பற்றிக் கொண்ட வீட்டைப்போல் அவள் இருந்தாள். அவள் இங்கே சென்றாள். “வந்து பாருங்கள், நான் செய்தவைகளை யெல்லாம் எனக்குச் சொன்ன ஒரு மனிதன் இருக்கிறார். அவர் மேசியாதானோ?” என்று கூறினாள். 59இப்பொழுது நினைவு கூருங்கள். இயேசு மறுபடியும் அதை திரும்பச் செய்ய வில்லை. ஒருபோதும் ஒருவிசைகூட அவர் அதைச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் அந்த முழு நகரமே அந்த ஸ்திரீயின் சாட்சியினிமித்தம் விசுவாசித்தார்கள். அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள். அதைக்குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். ஓ, என்னே! மேசியா என்னவாயிருப்பார் என்கிற வாக்குத்தத்தத்தை அவள் அறிந்திருந்த போது, அந்த வாக்குத்தத்தமானது அவளது கண்களுக்கு முன்பாக நிறைவேறியதைப் பார்த்தபோது, அது அவளது கண்களைத் திறந்தது. பாருங்கள்? அவர்கள் பாவத் தோடு மூடப்பட்டு கிடந்தார்கள். ஆனால் அந்த வாக்குத்தத்தமானது, “அது... மேசியா யானவர், அவர் வரும்போது அவர் அதைத்தான் செய்வார்” என்று அவள் கூறினாள். அவர், “நானே அவர்” என்று கூறினார். அவளுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவள் நித்திய ஜீவனைப் பெற்றுகொண்டாள். ஏனென்றால் அவளுடைய கண்கள் திறக்கப்பட்டன. பேதுருவினுடைய கண்கள் திறக்கப்பட்டன. நாத்தான்வேல் கண்கள் திறக்கப்பட்டன. அதைக்குறித்து நேற்றிரவு நாம் பேசினோம். இந்த நாட்களிலே அது நம்முடைய கண்களுக்கு என்ன செய்தது? ஒரு வாக்குத்தத்தம் நிறைவேறியதே, அது அவர்களுடைய கண்களைத் திறந்ததா? நாம் அதை பரி.யோவான் 14:12-லும், எபிரேயர் 13:8-லும், பரி.யோவான் 14:9-லும் நாம் பார்த்தோம், மேலும் லூக்கா 17:27-28-லும் நாம் பார்த்தோம். வாக்குத்தத்தம் செய்யப் பட்ட சகல வேதவசனங்களிலும், மல்கியா 4-லும், அவைகள் அனைத்தும் சரியாக இங்கே நமக்கு முன்பாக நிறைவேறியது நமது கண்களுக்கு அது என்ன செய்தது? அது அவர்களது கண்களைத் திறக்கவில்லை என்றால், அது அவர்களை நித்தியமாக குருடாக்கிவிடும். அது சிலருக்குத் திறக்கப்படுகிறது, மற்றவர்களை குருடாக்குகிறது. பாருங்கள்? யாருக்குத் திறக்க வேண்டுமோ அவர்களுக்குத் திறக்கப்பட்டது. இந்தக் கடைசி நாட்களிலே, “விசுவாசத்தை திரும்ப அளிப்பேன்” என்றுதான் செய்யப் போவதை வாக்குரைத்தாரோ, அதைத்தான் அவர் கூறினார். 60ஓ, பெந்தேகொஸ்தே ஜனங்களே தேவனுடைய பரிசுத்த ஆவியை அறிக்கை செய்பவர்களே, பரலோகத்தின் தேவன் தாமே பாரம்பரியத்திலிருந்து, அவர் என்ன கூறினாரோ அவர் அதை செய்வார் என்று நாம் விசுவாசிக்கிறோம் என உரிமைகோரிக் கொள்கின்ற வேதாகமத்தின் ஒரு வாக்குத்தத்தத்தை உடைய ஜீவனுள்ள தேவனிடத் திற்கு உங்கள் கண்களை திறந்து - திறந்து அருள்வாராக. இந்தக் கடைசி நாட்களிலே அழைக்கப்பட்ட ஆபிரகாமின் இராஜரீக வித்தானது, தம்முடைய ஜனங்களின் மத்தியிலே யெகோவா தாமே மாம்சத்தில் இறங்கி வந்து சோதோமின் நாட்களில் செய்ததைப் போல செய்வார். இன்றிரவு செய்தியை நீங்கள் கேட்டீர்களா? எப்படியாக, இந்த மாநிலத்திலேயே, நான் மறந்து விட்டேன். எத்தனை நூறு ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், அவர்கள் ஆண்புணர்ச்சிக்காரர்களாக ஆகிறார்களென்று அது நிரூபிக்கப்பட்டிருக்கிறதென்று. இன்றிரவு செய்தியிலே சொல்லப்பட்டது. ஓ, அது எல்லாமாக, அடிமட்டமாக அழுகிப்போய் விட்டது என இந்த அரசாங்கமே கூறுகிறது. இந்த அரசாங்க அலுவலகர் கள் கிட்டதட்ட நாற்பது சதவீதம் பேர் ஆண்புணர்ச்சிக்காரர்கள் என்று நிரூபிக்கப்பட்டி ருக்கிறார்கள். என்னுடைய அலுவலகமும் இதுபோன்ற கடிதங்களால் நிரம்பியுள்ளது. தாய்மார்கள் தங்கள் பையன்மார்கள் பையன்களுடன் வாழ்வதாகக் கதறுகிறார்கள். மேலும் பாருங்கள், அப்படிப்பட்ட நாட்களில்தான் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காரியமும் அப்படியாக இருக்கிறது! தேசங்கள் உடைகின்றன. இஸ்ரவேல் விழித்தெழும்புகிறது, அவள் தன்னுடைய தாய் நாட்டில் இருக்கிறாள். அத்திமரம் துளிர் விடுகிறது. ஓ, சபையானது லவோதிக்கேயாவிலே உறங்கி விட்டது. இயேசுவோ, கொஞ்சம் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்கிறார், ஆனால் முடியவில்லை ..................... பாருங்கள். இருந்தும், வேதவசனங்கள் கூறியுள்ள சகல காரியங்களுடன் சபையானது புறம்பாக உலகம் என்னும் படுக்கையில் உறக்கம் கொண்டிருக்கிறது. ஓ, சபையே, உன்னால் அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ள முடியவில்லை யென்றால், அப்படியே உன் இருதயத்தை திறப்பாயாக, அவர் அன்று செய்தது போலவே, அவர் தம்மை அடையாளம் காட்டவில்லையா எனப்பார், அந்த, “நேற்றும் இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறவரைப் பார்” ஒரு நிமிடம் நாம் தலைகளை வணங்குவோம். 61பரலோக பிதாவே, சில நேரங்களில் ஒருவேளை நான் ஜனங்களிடத்தில் இவ்வளவு கடூரமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. இப்படி முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால், கர்த்தாவே, அது ஒரு தச்சனுடைய வெளிகாட்டும் தன்மைதான். “ஒரு ஆணியை அடிக்காமல், எப்படியொரு பலகையை நிற்க வைக்க முடியும்?” ஆகவே, தேவனே நான் வேண்டிக் கொள்கிறேன். ஒரு கிறிஸ்தவ அன்பினாலே அவர்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அந்த நோக்கத்தில் நாங்கள் இதை முயற்சிக்கிறோம். இது ஒருவேளை இங்கு வந்திருக்கிற ஜனங்களிலே சிலருக்கு இதுதான் ஒருவேளை கடைசி நேரமாக அனுமதிக்கப்பட்டிருப்பார்கள், அனுமதிக்கப்பட்ட நாளாய் இருக்கலாம். ஒருவேளை நாங்கள் கடைசியாக சந்திக்கிற வேளையாய் இருக்கலாம். இல்லாவிட்டால் இதுபோன்ற எழுப்புதலை இந்த நகரம் இனி பெற்றுகொள்ளாமல் இருக்கலாம். இருந்தும், சில நேரத்தில் அவர்கள் ஒரு “எழுப்புதலை உடையவர்களாக” அவர்கள் உரிமை கோரிக்கொண்டு அவர்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கலாம். சபையோ போய்விட்டிருக்கலாம். அந்த கதவானது முத்திரை போடப்பட்டிருக்கலாம். ஒருவரும் பேழைக்குள் உட்பிரவேசிக்காதபடிக்கு, மழை வருவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு அவனுக்கு பின்பாக கதவு மூடப்பட்டபோது நோவா பேழைக்குள் இருந்தான். உலகமோ தொடர்ந்து அதே விதமாகச் சென்றது. மேலும் ஏதோ ஒரு நாளில் அது அதேவிதமாகத்தான் இருக்கும். இயேசு என்ன கூறினார் என்பதற்கு அவர்கள் விழித்துக்கொள்ளலாம். “எலியா முந்தி வரவேண்டும்” என்று வேதபாரகர்கள் கூறுகின்றனரே என்று சீஷர்கள் கேட்டபோது, ''அவன் ஏற்கனவே வந்தாயிற்று நீங்களோ அதை அறியவில்லை“ என இயேசு கூறினார். 62அதேபோல், அவருடைய வருகையிலும் எடுத்துக்கொள்ளப்படுதலும் இருக்கலாம். இந்த நாட்களின் ஒன்றிலே, அவர்கள் உபத்திரவத்திற்குள் செல்லு வார்கள். அவர்கள், சொல்லுவார்கள் “நான் நினைத்தேன், மணவாட்டி இன்னுமாக போய்க்கொண்டிருக்கிறாள் என்று. சபையானது உபத்திரவத்திற்குள்ளாக செல்லுமா?'' நிச்சயமாக. சபையானது உபத்திரவ காலத்திற்குள் செல்லும், ஆனால் மணவாட்டி யல்ல. ”அது ஏன் அப்படியாக முதலாவதாக இருக்க வேண்டும்?'' அதன்பிறகு, அந்த வார்த்தை “அவள் ஏற்கனவே சென்றுவிட்டாள்” என்று இருக்கும். நீங்கள் அதை அறியவில்லை. அவர்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருப் பார்கள். சபைகள் நடத்திக்கொண்டிருப்பார்கள், அதே விதமாக. தேவனே, ஜனங்கள் இன்றிரவு, வேதவசனங்கள் அவர்களுக்குப் புரியாவிட்டாலும், அது அவர்களுக்குப் புதிரைப்போல இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும், “இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவே, இங்கு பிரசன்னமாய் இருக்கிற நீர் தாமே என்னோடே வந்து தங்கியிரும். எனக்கு - எனக்குத் தேவையிருக்கிறது என்று கூறுவார்களாக. ஒரு ஸ்திரீ உமது வஸ்திரத்தைத் தொட்டதையும், நீர் அவளைத் திரும்பிப் பார்த்து அவளுடைய தொல்லை இன்னதென்று கூறினதையும் அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது என்று கூறியதையும் நான் வேதத்தில் வாசித்திருக்கிறேன். மேலும் இந்த அளவுக்கு நான் வேதத்தில், அதாவது எங்களுடைய பெலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராய் நீர் இப்பொழுது இருக்கிறீர் என்றும், நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவும் இருக்கிறீர் என்றும் வாசித்திருக்கிறேன். இப்பொழுதும் கர்த்தாவே, என் இருதயத்துக்குள் வாரும், எனக்கு வெளிப்படுத்தும். நான் உம்மோடு நடந்தும் உம்மை நேசித்து இருந்தாலும், உண்மையில் அது செய்யப்பட்டதை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆகவே, தேவனே நான் இன்று இரவு எனக்காக அதைச் செய்ய வேண்டுமென்று நான் மன்றாடுகிறேன்” என்று கூறட்டும். பிதாவே, இந்த மக்களுக்கு இதை அருளும். இந்த சபை முழுவதும் பரவியிருக்கின்ற எங்கள் எல்லோருடைய கண்களும் திறக்கப்பட்டு, நாங்கள் யாவரும் அந்த அன்பான, இனிமையான உயிர்த்தெழுந்த, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற கர்த்தராகிய இயேசுவைக் காண்போமாக. இதைத் தந்தருளும். தேவனுடைய இராஜ்ஜியத்தின் பொருட்டு, எங்கள் கண்கள் திறக்கப்படுவதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 63இப்பொழுது, உங்களையெல்லாம் நேரத்தோடே அனுப்பிவிடும்படியாக, இங்கே மேலே வரும்படியாக அவர்களிடம் ஜெப அட்டைகள் இருந்தாலும் கூட, ஒரு ஜெப வரிசையை அழைக்கும்படி எனக்கு நேரம் இருக்காது. நீங்கள் இங்கே மேலேதான் வரவேண்டும் என்பதில்லை. தேவன் எங்கும் இருப்பதுபோல் மகத்தானவராய் இங்கும் இருக்கிறார். அவர் “சர்வ வியாபியாயிருக்கிறார்” என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? (சபையார் ஆமென்“ என்கிறார்கள் - ஆசி) நிச்சயமாகவே, அவர் அப்படியிருக்கிறார். அவர் சர்வ ஞானியாய், இருப்பதன் மூலம் அவர் சர்வ வியாபியாய், இருக்கிறார். இப்பொழுது, அவர் திரும்பி வருகிறார், ஏனெனில் அவர் - அவர் சர்வமும் அறிந்தவராய் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆகவே, அவர் சர்வமும் அறிந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். முன்குறிக்கப்பட்ட என்கிற வார்த்தையைப் போலவே, அது ஒரு நல்லதல்லாத வார்த்தை. சில நிமிடங்களுக்கு முன்புதான் நான் அந்த வார்த்தையை உபயோகித் தேன். அதனால் நானே சிக்கிக்கொண்டேன். ஏனெனில் ஆவியானவர் விலகிச் செல்வதை உணர்ந்தேன். அநேக மக்கள் முன்குறித்தலில் விசுவாசம் கொள்வ தில்லை. முன்குறித்தல் என்று சொன்னால் ஒரு நல்லதல்லாத வார்த்தை. உண்மையில் அது முன்னறிதல். தேவனுக்கு முன்னமே யார் விசுவாசிப்பார்கள், யார் விசுவாசிக்க மாட்டார்கள் என்று தெரியும். ஆகையால் அவர் தம்முடைய முன்ன றிவைக் கொண்டு அவரால் முன்குறிக்க முடியும். அதன் காரணமாகத்தான் யார் விசுவாசிப்பார்கள், யார் விசுவாசிக்கமாட்டார்கள் என்று அவர் அறிந்திருக்கிறார். பாருங் கள்? அவர்....... அவர் அப்படி செய்வதில்லை , “ஒருவரும் கெட்டுப்போவது அவருடைய சித்தமல்ல.” ஆனால் யார் கெட்டுப்போவார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அப்படி அவர் அறியவில்லையென்றால், அவர் தேவனில்லை . அவர் சர்வ வியாபியாய் இருப்பது போலவே அவர் சர்வ வல்லவராகவும் இருக்கவேண்டும்; பாருங்கள் சர்வ ஞானி சர்வ வியாபி, சர்வ வல்லவர், முடிவில்லாதவர். அவர் முடிவில்லாதவர். அவர் அப்படியாக இல்லையென்றால் அவர் தேவனில்லை. ஆகவே அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், அதனால்தான், துவக்கத்திலேயே அதன் முடிவைக்குறித்து அவர் சொல்லிவிடமுடியும், ஏனெனில் அவர் வார்த்தையாக இருக்கிறார். 64இப்போது, நான் முற்றிலும் ஒரு அந்நியன். இங்கே இருக்கிற இந்தப் பையனைத் தவிர எனக்குத் தெரிந்த வேறொருவரையும் நான் இங்கே காணவில்லை. இந்தப் பையனை எனக்குத் தெரிந்தவனாயிருந்தால், அநேக நாட்களுக்கு முன்பு நீ நீண்ட தாடி அல்லது அதுபோன்று ஏதோ ஒன்றை வைத்திருந்தாய் அல்லவா? இங்கே முன்னால் அமர்ந்திருக்கிற இந்த மக்களை எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்று நான் நினைத்தேன். அவரைத்தவிர எனக்குத் தெரிந்த ஒரு நபரையும் நான் இங்கே காணவில்லை. நான் அப்படியே அங்கே பார்க்க நேரிட்டபோது, ஒருவரைக்கூட என்னால் காணமுடியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்பாக இந்தப் பையன் அங்கே உட்கார்ந்து அழுதுகொண்டு, தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான். நான் “இது அன்றொரு நாள் நான் நேரில் பார்த்துப் பேசிய அதே வாலிபப் பையனைப்போல் இருக்கிறதே” என்றும் நினைத்தேன். அவன் எங்கிருந்து வருகிறான் என்று கூட எனக்குத் தெரியாது. அவன் முகத்தை நான் அடையாளங்கண்டுவிட்டேன். நான் ... பாருங்கள்? ஆனால் அவன் ஒருவன் மட்டுமே இங்கே இப்போது எனக்குத் தெரிந்த வனாக இருக்கிறான். சரி.. இப்பொழுது உங்கள் இருதயங்களை அப்படியே இவ்விதமாக திறந்து கொடுப்பீர்களா? எத்தனை பேருக்கு தேவன் தேவை? உங்கள் கைகளை உயர்த்தி ''எனக்கு தேவை, நான் தேவையுள்ளவனாயிஇருக்கிறேன்“ என்று சொல்லுங்கள். நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. கைகளை மாத்திரம் உயர்த்துங்கள். மேலும் நான் பார்த்தேன். 65இப்போதும் பரலோகத்தின் தேவன்தாமே அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்து வை எழுப்பியவர் அவருடைய எழுதப்பட்ட வார்த்தையைக் கொண்டு நான் முயற்சிக் கிற வேளையில், ஒரு தெய்வீக வரத்தைக் கொண்டு, அவருடைய பிரசன்னத்தை, இந்த ஜனங்களுக்கு முன்பாக அவர்களுடைய மகிமைக்காக, அடையாளம் காட்ட, அவர் பரிசுத்த ஆவியை என்மீது அனுப்புவாராக. சோதோமின் நாட்களில் அவருடைய வேலைகளை நிறைவேற்ற, தேவன் மானிட மாம்சத்தில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டதைப் போல இயேசுகிறிஸ்துவை மானிட மாம்சத்தில் அடையாளம் காண்பிக்க, இந்த வரத்தின்படி நான் என்னை தளர்த்திக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர் இதைத் தந்தருள்வாராக. இப்போது ஒவ்வொருவரும், பயபக்தியோடு இவ்விதமாய் உங்கள் இருதயத்திலே ஜெபிக்க ஆரம்பியுங்கள், “ஆண்டவராகிய இயேசுவே, நான் என் இருதயத்தைத் திறக்கப்போகிறேன். நீர் உள்ளே வாரும். வெளிப்புறமாக உள்ள எல்லா அவிசுவாசத் தையும் நான் சாத்திப் போடட்டும். அப்போது நீர் சிலுவையில் அறையப்படுமுன் நீர் செய்த காரியத்தை எனக்கு அறியப்படுத்தும், அப்பொழுது நீர் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டீர் என்று நான் அறிந்து கொள்ளுவேன்”. 66இப்போது அது உங்கள் ஒவ்வொருவரையும் பிடித்துக்கொள்ள முடியாது. அது முற்றிலும் சரியே. ஆனால் உங்களில் சிலரை சந்தேகமே இல்லை அது பிடிக்கப் போகிறது. அங்கே வெளியே உள்ள அந்த பெண்மணியைப்போல, அது ஒருவரை ஒருவேளை பிடிக்குமென்றால், மற்றவர்களுக்கோ அது சிக்சாரில் உள்ள ஜனங்கள் அப்படிச் செய்யவேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர்கள் அதை விசுவாசித் தனர். மேலும் ஒருவர் ஒரு பெண்மணியோ, ஒரு பையனோ, ஒரு சிறு பிள்ளையோ, அது யாராயிருந்தாலும் சரி, அவர்கள் அவ்விதம் அடையாளங்காணப்பட வேண்டும்; ஒருவேளை அங்கே பின்னாலிருக்கிற ஜனங்களாகிய நீங்கள் அவரை இதுவரை கண்டதில்லை, நாம் நிச்சயம் விசுவாசித்தே ஆகவேண்டுமென்று, நாம் கற்பிக்கப் படிருக்கிறோம். அது சரிதானே சகோதரர்களே? உங்கள் எல்லோருக்கும் அது அர்த்தம் நிறைந்ததாய்க் காணப்படுகிறதா? (ஊழியக்காரர்கள் “ஆமென்”, என்கின் றனர் - ஆசி) நிச்சயமாக. நீங்கள் அவ்விதமாக பிரசங்கம் செய்யும் போது கடினமாயிருக்கும், அதன் பிறகு வந்து ... பாருங்கள், அது இருவேறு வரங்களாயுள்ளது. ஒன்று பேசுவது. மற்றொன்று தரிசிப்பது. 67இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் அதை அப்படியே விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள். சந்தேகப்படாதீர்கள். தேவனில் விசுவாசம் மட்டுமே கொள்ளுங் கள். நாம் இந்தப்பக்கமாக பார்த்தவாறு இங்கே ஏதோ ஓரிடத்திலிருந்து ஆரம்பிக் கலாம். யாராவது ஒருவர் பாருங்கள். நீங்கள் அங்கே சுற்றிலும் எல்லாவிதமான விசுவாசத்தோடும் நிற்க வேண்டும். பாருங்கள், நீங்கள் ஏதோ தடவிப் பார்ப்பதல்ல. அது அப்படித்தான் அதின் உச்சியில் தாவி ஏறுவது.. அது உங்களுடைய ஒரு பாகம் போன்றது, பாருங்கள்? உங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, 'நல்லது நிச்சயமாக அது வார்த்தைதான் நான் அதை விசுவாசிக்கிறேன், அங்கே மேலே இருக்கும் அந்த சிறிய வயதான நபர்களுக்கு என்னைத் தெரியாது. ஆனால் எனக்கு இயேசுவைத் தெரியும். அவர் வார்த்தையைக் குறித்து கூறியிருக்கிறார், நானும் அதை விசுவாசிக்கிறேன்“ என்று சொல்லுங்கள். இவ்விதமாகச் செய்து, ”நான் வியாதியுள்ள வனாயும், தேவையுள்ளவனாயுமிருக்கிறேன்“ என்று கூறுங்கள். எனக்கு ஒரு தேவையிருக்கிறது என்று கூறுங்கள்... நான் உங்களை சுகப்படுத்த முடியாது, இதுவும் உங்களை சுகப்படுத்தாது, ஆனால் அது அடையாத்தை மட்டுமே காண்பிக்கிறது. மக்களாகிய நீங்கள் சந்தேகம் உடையவர்களாய் இருக்கக் கூடும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை . நீங்கள் மாத்திரம் - நீங்கள் மாத்திரம் அப்படியே இங்கே அதின் ஒரு தொடுதலைப் பாருங்கள். அது என்ன சம்பவிக்குமென்றும், யாருக்கு சம்பவிக்குமென்றும் யார், யார் இன்னார் என்றும், மற்றும் அதைக் குறித்து எல்லாக் காரியங்களையும் கூறிவிடும். அது உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான முறை செய்யப்பட்டிருந்தும் ஒருமுறை, ஒரே ஒருமுறையாகிலும் அது தவறிப்போனதில்லை. எத்தனைபேர் அதைப்பார்த்து அது உண்மையென்று அறிந்திருக்கிறீர்கள். உங்கள் கைகளை உயர்த்துங்கள் (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) பாருங்கள்? நல்லது, என்னே! பாருங்கள்? ஒருபோதும்... அது அவ்வளவு துல்லியமாக நடந்த பிறகு. அது தேவனேயன்றி வேறொன்றாக இருக்க முடியாது, ஏனெனில் அதுதான் அவருடைய வாக்குத்தத்தம். அது ஒருபோதும் தவற முடியாது. இப்போது, அவர் அப்படிச் செய்வதில்லை ... உங்களை சுகமாக்குவதில்லை , ஏனெனில் அவர் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார். அவர் அப்படியே தம்முடைய வாக்கைக் காத்துக்கொள்ள அவர் இங்கே இருக்கிறார் என்பதை அடையாளம் காண்பிக்கிறார். இப்போது அந்த வாக்குத்தத் தத்தை காத்துக் கொண்டாரென்றால், அவர் சுகமளிக்கும் வாக்குத்தத்தத்தையும் காத்துக் கொள்கிறார். அது சரிதானே, சகோதரர்களே? (ஊழியக்காரர்கள் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அவர் அந்த வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்வாரானால் அவர் தம்முடைய சுகமளிக்கும் வாக்குத்தத்தத்தையும் காத்துக்கொள்வார். அது மிக உறுதியான அடையாளம். 68ஒருவேளை இங்கே யாரோ ஒருவர் ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்து, நான் அவரை தூக்கி நிறுத்தி, ஒரு மனோத்தத்துவ காரியத்தை நடப்பித்து அல்லது ஒருசிறு காரியமானது, அந்த நபரை நடக்கச்செய்யலாம், ஆனால் அது இருதயத்தின் எண்ணங்களைப் பகுத்தறியாது. பாருங்கள்? ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் யாரென்றும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும், மற்றும் உங்களைக் குறித்து மற்றெல்லா காரியங்களையும் அறிந்துகொள்வதற்கு ஒவ்வொரு முறையும் பூரணமாக இருக்க தேவன் மாத்திரமே அதை எடுத்துக்கொள்கிறார்கள். இங்கே, நான் - நான் விரும்புகிறேன், நான் அதை விளக்கிக் கூற விரும்புவேன். நான் அதை விளக்கிக்கூற முயற்சிக்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் அதைச் செய்யமுடியாது. ஆனால் இப்பொழுது, நான் இந்த வார்த்தையைக் கூறமுடியுமானால், எனக்குள் இருந்த ஏதோ ஒன்று வேறொரு பரிமாணத்திற்குள் மாறிவிட்டது. பாருங்கள்? வனாந்திரத்திலே இஸ்ரவேலரைப் பின் தொடர்ந்த அதே அக்கினி ஸ்தம்பத்தையே சரியாக நான் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் அதனுடைய புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் கரங்களைக் காணட்டும். நிச்சயமாக. நான் சரியாக அதையேதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், சரியாக இங்கே, அதற்கு நேராகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன், சொகுசாவின் நிறம், ஒரு விதமான மஞ்சள் கலந்த பச்சைநிறம், அப்படியே சுழன்று கொண்டிருக்கிறது. 69ஒரு பெண் கடந்துபோகிறதை பார்க்கிறேன். அவள் சரியாக இங்கே உட்கார்ந்திருக்கிறாள், ஆம், நேராக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் சரியாக இங்கே உட்கார்ந்து நேராக என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அவதிப்படுகிறாள். அவளுக்கிருக்கிற ஒரு வியாதிக்காக அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது ஒரு இரத்த வியாதி. அது ஒரு நீரழிவு நோய். அதுதான் சரி. அது நீங்கள் இருவருமே ஆகும். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிற இரண்டு வாலிபப் பையன்களே உங்களுக்கும் கூட அந்த நீரழிவு வியாதி இருக்கிறது. பாருங்கள்? இப்போது, அது என்ன? நீங்கள் அதைக்குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தீர்கள், நீங்கள் உங்கள் இருதயத்தைத் திறந்து கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்க வில்லையா? நீங்கள் சரியாக உள்ளே வருகிறதை நான் பார்த்தேன். அவர் சிலுவையிலறையப்படுவதற்கு முன் செய்தவிதமாக சரியாக அது செய்தது. இப்போது உங்களுக்கு என்னைத் தெரியாது, இல்லையா? உங்களில் ஒருவருக்கும் என்னைத் தெரியாது. அது சரியென்றால், என்னை உங்களுக்கு தெரியாது என்றால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். உங்களுக்கு சரி, சரி. உங்களுக்கு என்னைத் தெரியாது தான். அப்படியானால் அது அவராகத்தான் இருக்கவேண்டும், ஏனெனில் எனக்கும் உங்களைத் தெரியாது. அது அவராகத்தான் இருக்கவேண்டும். 70நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், தேவன் அதை ரூபகாரப்படுத்துவார். நீங்கள் அதை விசுவாசிக்கத்தான் வேண்டும். இங்கே ஒரு மனிதன் யாரிடமோ கிசுகிசுத்து ஏதோ சொன்னார். அவர் இங்கே உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார், நல்ல பருத்த உருவம் கொண்டவர், வெள்ளை சட்டை அணிந்து கொண்டிருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் தானே, ஐயா, அது சரியா? அவர் சரியாக உமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். எனக்கு உம்மைத் தெரியுமா? இல்லை. அது உமக்குப் பின்னால், உள்ளது ஐயா. இல்லை. உமக்கும் பின்னால் அந்த வெள்ளை சட்டை அணிந்த மனிதன். அப்படியே உம்முடைய இடத்திலேயே இரும். நீங்கள், தேவனே ஆனால்... நீங்கள் விசுவாசியுங்கள். வெள்ளைச்சட்டை போட்ட மனிதர். அது நீங்கள் தான். ஆம். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருக்கிற நீங்கள். உம்முடைய தொல்லை என்னவென்று என்னிடம் கூறுவாரானால் அவர் உம்மைக் குணமாக்குவார் என்று விசுவாசிப்பீரா? உமக்கு இருதயக்கோளாறு உள்ளது. அது சரியென்றால் உம்முடைய கையை உயர்த்தும். சரி. உம்முடைய சுகத்தை ஏற்றுகொள்கிறீரா? இப்போது, இங்கே இந்தப்பக்கம் ஒரு மனிதன் இருக்கிறார். இங்கே எங்கோ கையை உயர்த்திக்கொண்டிருந்தார். இந்த சிறிய அதற்குள்ளாக... நீர், நீர் என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்றும், அவருடைய தீர்க்கதரிசி என்றும் விசுவாசிக் கிறீரா? நீர் அப்படிச் செய்கிறீரா? நீரும்கூட ஒரு இருதயக் கோளாறினால் அவதியுறு கிறீர், உமக்குக் கீல் வாதமும் உண்டு. அங்கே உமக்கு அடுத்ததாக உட்கார்ந்தி ருப்பவர் உம்முடைய மனைவி, அவர்களும் கீல் வாதத்தால் அவதியுறுகிறார்கள். அவளுக்குத் தலை கிறுகிறுப்பும் கூட இருக்கிறது. அது சரியென்றால், உம்முடைய கையையுயர்த்தும். அது சரி. நீங்கள் யார் யாரென்று என்னால் கூறமுடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? திருவாளர் மற்றும் திருமதி ஜோன்ஸ் அவர்களே, நீங்கள் இப்போது விசுவாசிக்கலாம், விசுவாசித்து சுகமடையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், உங்களுக்கு நான் ஒரு அந்நியன். சந்தேகப்படாமல், தேவனில் விசுவாசம் வையுங்கள். அப்படியே விசுவாசி யுங்கள். 71இங்கே ஒரு மனிதன், ஒருவிதமான நரை மயிருடன் அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கிறார், தலை மயிரை பக்கவாட்டில் வாரியிருக்கிறார். அந்த வெளிச்சம் உம் பக்கத்தில்தான் நின்று கொண்டிருக்கிறது ஐயா,....?... என்னை தேவனுடைய தீர்க்கதரிசியென்றும், அவருடைய ஊழியக்காரனென்றும் விசுவாசிக்கிறீரா? அந்த ஒவ்வாமை ஜுரம் உம்மைவிட்டு நீங்கப்போகிறது என்றும், நீர் சரியாகிவிடுவீர் என்றும் விசுவாசிக்கிறீரா? நீர் அப்படிச் செய்கிறீரா? அப்படியானால் உம்முடைய கரத்தை உயர்த்தும். இப்போது நான் உமக்கு முற்றிலும் ஒரு அந்நியன். அதற்காகத்தான் நீர் ஜெபித்தீர். அடுத்த மனிதன் அவரும் கூட தன் கையை உயர்த்தியிருந்தார், ஏனெனில் அவர் விசுவாசித்தார். நல்லது, என்ன ... அவருக்கு ஒவ்வாமை ஜுரம் இல்லை, ஆனால் அவருக்கு கீல்வாதம் இருக்கிறது. அதுசரியே, சரியே. உம்முடைய கரத்தை அசையும், ஐயா. அது சரி. இப்போது, நீர் விசுவாசிக்கிறீரா? விசுவாசம் கொள்வதற்கு, தேவன்தாமே அந்தக் கிருபையை அவருக்கு அருளுவார். அந்தக் கடைசியில் உட்கார்ந்துக்கொண்டிக்கிற இந்த சிறிய பெண்மணி. நீர் விசுவாசியும், பெண்மணியே, உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? ஹஹ்ஹ ஹ். அந்த வயிற்று வலி உம்மைவிட்டுப் போய்விடும் என்று விசுவாசிக் கிறீரா? நீர் செய்வீரா? உம்முடைய இருதயத்திலே ஒரு பாரம் உண்டு, இல்லையா? அது உம்முடைய மகளுக்கான பாரம். அவள் இங்கே இல்லை. அவள் எங்கே வசிக்கிறாள் என்று உன்னிடம் என்னால் கூறமுடியும் என்று விசுவாசிக்கிறாயா? அவள் கலிபோர்னியாவில் வசிக்கிறாள். அவள் மேல் ஒரு கறுப்பு நிழல் இருக்கிறது. அதற்காக ஏதாகிலும் செய்யப்படாவிட்டால் அவள் மரிக்கப் போகிறாள். ஏனெனில் அவள் புற்றுநோயினால் நிழலிடப்பட்டிருக்கிறாள். அது சரியென்றால் உன் கையை யுர்த்து. தேவனுடைய உதவியினாலே நீர் யாரென்று என்னால் கூறமுடியும் என்று விசுவாசிக்கிறாயா? இயேசு சீமோனைப் பார்த்து அவன் யாராயிருக்கிறான் என்று கூறினார். அது சரிதானே, திருமதி.அக்கர்மேன்? அதுசரி. உம் கையை உயர்த்தும். ஹுஹ் - ஹஹ். சரி. 72ஒரு சிறிய மிஷனரி பெண்மணி உனக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கிறாள். அவளும் கூட எதையோ குறித்து ஒருவித கவலையோடிருக்கிறாள். அதுசரி. ஒரு நண்பனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நீ எல்லாவற்றையும் இழந்துவிட்டாய், அது சரியா? மேலும் நீ ஒரு மிஷனரியா? உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. எனக்கு உன்னைத் தெரியாது, ஒருபோதும் உன்னைப் பார்த்ததில்லை ஆனால், அது உண்மை . உனக்குப் பின்னால் அந்த, நரைத்த முடியுடைய பெண்மணி, வயிற்று வலியோடு கூட உட்கார்ந்திருக்கிறாள். அந்த வயிற்று வலியிலிருந்து தேவன் உன்னை சுகமாக்கு வார் என்று விசுவாசிக்கிறாயா? உனக்கு அதுவும் இருக்கிறது. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி) பாருங்கள்? அது என்ன? அது அடையாளங்காணப்பட்டிருக்கிறது. இப்போது, வார்த்தை அவ்விதம் கூறியது. இப்போது அவர் உங்கள் இருதயங்களுக் குள்ளாக வந்து அன்றைக்கு அவர் செய்தவிதமாகவே தன்னை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். அது அவர் சிலுவையிலறையப்படுவதற்கு முன்பாக சரியாக இதே விதமாக செய்தார் இல்லையா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அப்படியென்றால், அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (“ஆமென்”'). கண்கள் திறக்கப்பட்ட நிலையில் இப்போது நீங்கள் அவருடைய தெய்வீகப் பிரசன்னத்தில் நின்றுகொண்டிருப்பீர்களானால், சரியாக நியாயத்தீர்ப்பில் எந்த தேவனுக்கு முன்பாக நிற்கப்போகிறீர்களோ அதே தேவன் சரியாக இப்போது உங்களோடு இருக்கிறாரா? நீங்கள் சிந்திக்கப்போகிற ஒவ்வொன்றையும் அவர் அறிவார். இப்போது நீங்கள் உங்கள் தலைகளை வணங்குவீர்களா? 73நீங்கள் அவரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? அவர் உங்களுடைய இரட்சகராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் அப்படி யானால், ஜெபத்திற்காக சற்று எழுந்து நிற்பீர்களா? அவரை உங்கள் இரட்சகராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறவர்கள், நாம் இப்பொழுது ஜெபத்திற்காக சற்றே எழுந்து நிற்போம். ஐயா, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, அம்மணி, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. அம்மணி, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, இங்கே கவனியுங்கள். நாம் இப்பொழுது ஒரு க்ஷணம் எழுந்து நிற்போம், ஒரு நிமிடம், அப்பொழுது நான் உங்களுக்காக ஜெபிக்க முடியும். எழுந்து நில்லுங்கள். “நான் அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுகொள்ள விரும்புகிறேன். இப்பொழுது அவருடைய தெய்வீக பிரசன்னத்தில், நான் அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுகொள்கிறேன்”. இன்னும் வேறு யாராகிலும் இருப்பீர்களா? இன்னும் சிலர் இருப்பீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆகவே நீங்கள் உங்கள் காலூன்றி நிற்பீர்களா? கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. இப்போதே அதைச் செய்யுங்கள், பாருங்கள். நாளைவரை காத்திருக்காதீர்கள். நாளை என்பது இன்னும் அதிக தாமதமாகி விட்டிருக்கக்கூடும். இன்றைக்கு அவர் உங்கள் இரட்சகர்.நாளை அவர் உங்கள் நியாயதிபதியாய் இருக்கக்கூடும். பாருங்கள்? ஆகவே இப்பொழுதே, அவர் உங்கள் இருதயத்தோடு பேசிக்கொண்டிருப்பாரானால், அதேவிதமாக நீங்கள் உங்கள் இருதயத்தைத் திறந்து கொடுத்து போல. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, உம்மையும். அதுசரி. தொடந்து நின்று கொண்டிருங்கள். நீங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் இருக்கும்போதே, நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா? நீர் செய்வீரா? நீர் அதைச் செய்வீரா? நீர் அப்படியே அவரை உம் சொந்த இரட்சகராக ஏற்று கொள்வீரா? 74நீர் அதைச் செய்வீரானால், நான் வியப்படைகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும், இவ் விதமாக உங்கள் கரங்களை அவரவர் இருதயத்தின் மீது வைத்திருக்கும் வேளையில், நாம் யாவரும் ஜெபிப்போம். இப்போது நீங்கள் உங்கள் சொந்த வழியில் ஜெபம் செய்யுங்கள், “தேவனே! பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்”. நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் சில நிமிடங்களில் இங்கே மேலே வந்து, நாங்கள் அவரை எங்கள் இரட்சகராக ஏற்றுகொண்டோம் என்று, சாட்சி பகரும்படியாக நான் விரும்புகிறேன். “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை செய்கிறவன் எவனோ அவனை நானும் என் பிதா முன்பாகவும், பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கை செய்வேன்”. இப்போது, “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை செய்ய நீங்கள் வெட்கப்பட்டால் நானும் உங்களைக் குறித்து என் பிதா முன்பாகவும் பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கை செய்ய வெட்கப்படுவேன்” இப்போது கவனியுங்கள், நினைவு கூருங்கள், அவர் உங்கள் இருதயத்தை அறிந்திருக் கிறார். அவர் அதை நிரூபித்தும் இருக்கிறார். அவர் வார்த்தையாய் இருக்கிறார். இப்போது சில நிமிடங்களில் நீங்கள் அதைச் செய்ய வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். நாம் இப்போது ஜெபிக்கிறதான வேளையிலே, நீங்கள் அவரை ஏற்றுகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 75கர்த்தராகிய இயேசுவே, அந்த ஒளியானது அங்கே மேலே நகர்ந்து, மக்களைச் சுற்றிலும் சென்றுகொண்டிருந்தது, ஜனங்கள் மீது தரிசனங்கள் உடைத்தெழும்பிக் கொண்டிருந்தது, திடீரென்று அது நின்றது. திரும்பி வந்து, அப்போது நீர் என்னிடம் “பலியைக்காட்டிலும், கீழ்படிதலே உத்தமம்”, என்று கூறினீர். மேலும், கர்த்தராகிய இயேசுவே! இந்த - இந்த மக்கள் கூட்டத்தில், அவர்களில் அநேகர் இப்பொழுதே இருப்பதாக. உம்மை விசுவாசிக்கின்றனர். அவர்கள் உம்மை தங்கள் இரட்சகராக ஏற்றுகொள்கின்றனர். அவர்கள் விசுவாசிக்கின்றனர். அது உண்மை என்றும் அவர்கள் அறிவார்கள். அது சம்பவித்தபோது அவர்கள் சரியாக இங்கே இருந்தனர், மேலும் நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தீர் என்றும், இன்னும் உயிரோடிருக்கிறீர் என்றும் அறிந்திருக்கின்றனர் மேலும் நாங்கள் நியாயத்தீர்படையப் போகிறதையும் கிறிஸ்துவின் நியாயசனத்தின் அருகில் உம்மை சந்திப்பதையும் அறிந்திருக்கின்றோம். எங்களுக்கு மன்னிப்பு தேவை கர்த்தாவே. நீரே உம்முடைய சொந்த வார்த்தையில் சொல்லியிருக்கிறீர். நான் அதைக் குறிப்பிடுவேன், பிதாவே, அதன்மூலம் - நாங்கள் அறிந்துகொள்ளும்படியாக. நீர், “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டு” என்று சொன்னீர், சரியாக இந்த இரவிலே நாங்கள், மேலும் “என்னை அனுப்பினவரை விசுவாசிக்கின்றவனுக்கு,” நித்திய ஜீவன் “உண்டு” என்பதைக் குறித்துத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம், ஒருபோதும் நியாயத்தீர்ப்புக்குள் செல்லா மல் மரணத்தை விட்டு நீங்கி நித்திய ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான், இப்பொழுது, அது அப்படியே யோவான் 3:16 மற்றும் மீதமுள்ள சகல வார்த்தையைப் போன்ற உம்முடைய வார்த்தையாக இருக்கிறது, கர்த்தாவே. “விசுவாசிக்கிறவன் எவனோ” என்று நீர் கூறினீர். 76“என்னை அறிக்கை பண்ணுகிறவனை”, என்று மறுபடியுமாகக் கூறி, “மனுஷர் முன்பாகவும், என்பிதா முன்பாகவும், பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் நானும் அவனை அறிக்கை பண்ணுவேன்”. “ஆனால் மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ண வெட்கப்படுகிறவனை, நானும் என் பிதா முன்பாகவும், பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கை பண்ண வெட்கப்படுவேன்” என்றீர். இப்பொழுது, எல்லா இடங்களிலும் உள்ள உமது திவ்ய பிரசன்னமானது இன்றிரவு நீர் வந்துள்ளபடியே, மகத்துவமானதாக இருக்கும் உமது பிரசன்னத்தையும், விசுவாசிகளாக இங்கே இருக்கும் நாங்கள் உணரட்டும் அல்லது தேவன் நம் மத்தியில் சுற்றிலும் அசைவாடிக் கொண்டிருக்கிறார். கர்த்தாவே இதில் ஆச்சரியப்படுவதற் கில்லை, அது விசுவாசிக்கிறவைகளின் கண்களை எப்படியாய்த் திறக்கிறதாயிருக் கிறது. வார்த்தையை விசுவாசியாத அவிசுவாசிகளின் கண்களை அது குருடாக்கு கிறது“. இப்போது, உம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம், இந்த ஜனங் களின் கண்களை நீர் திறந்திருக்கிறீர். இப்போதும், கர்த்தாவே, இந்த ஜனங்களுடைய இருதயங்களை தேவரீர் திறந்து, பிதாவே, அவர்களை உம்முடைய வாசஸ்தலமாக ஆக்கிக்கொள்ளும். அவர்கள் உம்முடையவர்கள். நான் அவர்களை உம்மிடம் அளிக்கிறேன். அவர்கள் உம்முடையவர்கள். நான் அவர்களை உம்மிடம் அளிக்கி றேன். அவர்கள் உம்முடைய வார்த்தையின் பரிசுகளாய் இருக்கிறார்கள். உம்முடைய வார்த்தை அவர்களை அழைத்திருக்கிறது, உம்முடைய வார்த்தை அவர்களுக்கு அடையாளங்காட்டப்பட்டும் இருக்கிறது. மேலும், அவர்கள் எழுந்து நின்று சாட்சி பகர்வதன் மூலம் அவர்களும் தங்களை அடையாளம் கண்டுகொண்டனர் நீர் அவர்கள் பாவங்களை மன்னிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். “என்னிடத்தில் வருகிறவர்களை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை”, என்று நீர் சொல்லியி ருக்கிறீர். வானமும், பூமியும் ஒழிந்துபோம், உம்முடைய வார்த்தைகளோ ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை. கர்த்தாவே, இவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் உமக்கே சொந்தம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இவர்கள் ஒவ்வொருவரையும் நான் உரிமை கோருகிறேன். இதற்காக உம்முடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. அவர்கள் தாமே மணவாட்டிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டு, உயிர்த்தெழுதலில் செல்வார்களாக. ஒருவேளை இந்த பூமியின் மீது மறுபடியும் நான் அவர்களைப் பார்க்கவோ, பேசவோ, அல்லது அவர்களுடைய கைகளைக் குலுக்கவோ கூடாமற் போய், நான் அவர்களை கிறிஸ்தவ ஞானஸ்நானத்துக்குள்ளாய் நடத்துகிற சிலாக்கியம் கிடைக்காமற்போகுமானால், தேவனே ஒரு நாளிலே எல்லாம் முடிவடைந்து நாங்கள் அந்த கலியாண விருந்திலே அமர்ந்திருக்கும்போது மேசையின் எதிராக நான் அவர்களை நோக்கிப் பார்க்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைப்பதாக. அவர்கள் என்னை நோக்கி, “ஓ, சகோதரன் பிரன்ஹாம், நீர்தானே அன்று இரவு டேம்பாவில் உள்ள ஃபுளோரிடாவில் கூட்டம் நடத்தினீர், அந்த கூட்டத்தில் நானும் கூட எழுந்து நின்றேன்” என்பார்கள்.அப்போது, நான், “இவர்தான் அது, பாருங்கள், இவரேதான் அது” என்று சொல்லுவேன். இதைத் தந்தருளும் கர்த்தாவே, உம்முடைய கிருபை யினால் இவர்களைக் காத்துக்கொள்ளும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன், ஆமென். இப்போது நீங்கள் அமரலாம். 77இன்னும் சில நிமிடங்கள், நாங்கள் உங்களை இங்கே மேலே வரும்படியாக அழைக்கப்போகிறோம், உங்கள் சோதனைக்கு ஒரு அடையாளம் கொடுக்கப் போகிறோம். இப்போது எழுந்து நிற்கிற நீங்கள், ஜெபம் செய்து கொண்டிருக்கும்போது எழுந்து நின்ற நீங்கள், நீங்கள் ஒரு சரியான காரியத்தைச் செய்தீர்கள் என்று அது போன்று சாட்சி ஏதாவது சொன்னீர்களா? அதாவது நீங்கள் அவரை தேவனுடைய குமார னென்று விசுவாசிக்கிற நீங்கள், இப்போது அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுகொள்ளுகிறீர்களா? உங்கள் கைகளை உயர்த்தி, “இப்போது அவரை நான் ஏற்றுகொள்ளுகிறேன்”, என்று கூறுங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. “நான் அவரை என் சொந்த இரட்சகராக இப்போது ஏற்றுகொள்ளுகிறேன்,” என்று நூறு சதவீதம் கூறுவதுபோல் உள்ளது. இப்போது உங்களுடைய அடுத்தபடி நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படு வதாகும். உங்களுக்கு அதற்காக இங்கே ஒரு அறை இருக்கிறது, இல்லையா சகோதரனே? அதற்கு ஒரு அறை இருக்கிறதா? ஆம், ஐயா. அவர்கள் மேற்கொண்டு அதைக்குறித்து உங்களுக்கு ஆலோசனை கூறுவார்கள். இப்போது, ஜெபவரிசையை முடிக்கும்படியாக, நாம்..... இப்போது, இங்கும் அங்கும் நகராதீர்கள். பாருங்கள், நீங்கள் ஒவ்வொரு முறையும் அசையும்போதும், அது தேவனுடைய ஆவியை தொந்தரவு செய்கிறது. பாருங்கள்? இப்போது நகராதீர்கள். இப்போது நான் மறுபடியும் தாமதமாகிவிட்டேன். ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள், அப்படியே ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்து ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள். இப்போது அதுதான். அதுதான். நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிகளாய் இருக்கிறீர்கள். 78ஓ, ஆம். நீங்கள் நன்றாக உணரவில்லையா? அப்படியென்றால் “ஆமென்” என்று சொல்லுங்கள். (சபையார், “ஆமென்” என்கின்றனர் - ஆசி) தேவனுடைய பிரசன்னத்திலே நீங்கள் சரியாக உள்ளதாக உணருகிறீர்களா? அந்த இனிமையான, தாழ்மையான உணர்வு உங்களுக்கு உண்டாகிறதா? உலகத்திலும், அதின் காரியங் களிலும் நம்முடைய ஆத்துமாக்கள் ஒருபோதும் அடித்துக்கொண்டு போய்விட வேண்டாம். அந்த மகத்தான மேசியாவாகிய, இயேசுகிறிஸ்துவின் அன்பான, இனிமை யான பிரசன்னமானது பரிசுத்த ஆவியின் வடிவத்தில் நம் மத்தியில் காணப்படுகிற வேளையிலே. இந்த உலகம் அதைக்குறித்து ஒன்றும் அறியாது. ஆனால் நாம் அவரை அறிவோம். நாம் அவரைக் கண்டிருக்கிறோம். அவர் தம்மை அடையாளப் படுத்திக் காட்டியதை நாம் கண்டிருக்கிறோம். ஆபிரகாமின் நாட்களில் நடந்ததை நினைவு கூருங்கள், அந்த அந்த மாம்சத்தில் வந்த தேவன், அவர் ஒருபோதும் சோதோமுக்குள் இறங்கிச் செல்லவே இல்லை. அங்கே இரண்டு பிரசங்கிகள் இறங்கிச் சென்றார்கள், ஆனால் அவர் செல்லவில்லை. அவரோ தெரிந்துகொள்ளப்பட்ட, வெளியே அழைக்கப்பட்ட சபையோடே இருந்து விட்டார். அவருடைய செய்தியும் அதுவாகத்தான் இருந்தது. அவர் இன்று நம்மிடம் வருவது அருமையாக இல்லையா? நாமும் நம்மை ஆபிரகாமின் இராஜரீக வித்தாக அடையாளம் காட்டப்படுவதைப் பார்த்தோம். அவர் அங்கே தம்முடைய முதுகை கூடாரத்தின் பக்கம் திருப்பினவராய் உட்கார்ந்து, சாராள் தனக்குள் என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாள் என்பதை சரியாகக் கூறினார். இன்றிரவும் அதே காரியம்தான் இங்கே கடந்து வந்து அதே காரியத்தை மாம்ச சரீரத்திலிருந்து செய்தது. அது சம்பவிக்கும் என்று இயேசு சொன்னார், “மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களிலும் அப்படியே நடக்கும்”. 79இப்போது, அடுத்த இந்த காரியத்தையும் அவர், “விசுவாசிக்கிறவர்களை அடையாளங்கள் பின் தொடரும்; வியாதியஸ்தர்கள் மேல் கைளை வைப்பார்கள், அப்போது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கூறினார். இப்போது உங்கள் கைகளைக் கோர்த்து, உங்கள் இருதயங்களை ஒன்றிணைத்து, நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தி இப்போது வியாதியஸ்தர் களுக்காக ஜெபிப்போம். கிருபையுள்ள, எங்கள் பரலோகப் பிதாவே, காத்திருக்கிறதான இந்த ஜனங்களை, ஓ, தேவனே, உம்முடைய தெய்வீகப் பிரசன்னத்திற்குள்ளாக நாங்கள் கொண்டு வருகிறோம். அன்றைக்கு அந்த சீஷர்களாகிய கிலெயோப்பா மற்றும் அவரது நண்பர் அவ்விருவருக்கும் எம்மாவுக்கு சென்று சேர ஒரு பகல் முழுவதும் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சில நிமிடங்களில் அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். அவர்கள் மற்ற சீஷர்களோடு காணப்பட்டனர். அவர்கள் தங்கள் மத வைராக்கியங்களைக் குறித்து தர்க்கிப்பதற்காக வரவில்லை, ஆனால் அவர்கள் கண்ணார் அவரைக் கண்டிருந்தபடியால் திரும்பி வந்திருந்தனர். அவர்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் அவரைச் சந்தித்திருந்தனர். அவர்கள் - அவர்கள் அவர் பிரசங்கிப்பதைக் கேட்டிருந்தனர், மேலும் அவர் உயிர்த்தெழுந்த கிறிஸ்துதான் என்று தன்னைத்தான் நிரூபிப்பதை அவர்கள் பார்த்தனர். நீர் வார்த்தையாக இருக்கிறீர். வார்த்தை வெளிப்படுத்தப்பட்டும், பிரசங்கிக்கப் பட்டுமிருக்கிறது. வார்த்தை ரூபகாரப்படுத்தப்பட்டும் இருக்கிறது. “அந்த-அந்த வார்த்தை தாமே இருதயத்திலுள்ள சிந்தனைகளை பகுத்தறிகிறது.” அது அவ்விதம் கூறுகிறது. கர்த்தாவே, அந்த வார்த்தை அன்று எப்படி இருந்ததோ அதேபோல் இன்றும் இருக்கிறது என்பதில் நாங்கள் அதிக நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம். உயிர்த் தெழுதலின் அடையாளத்தை நாங்கள் காண்கிறோம், வார்த்தையும் உம்முடைய சபையும் ஒன்றாயிருக்க வேண்டுமென்று நீர் உம்மை வெளிப்படுத்துகிற அடையா ளத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனெனில் கணவனும் மனைவியும் ஒன்றாயிருக் கின்றனர். மணவாட்டியும் வார்த்தையும், ஒன்றாயிருக்கின்றனர். 80ஓ தேவனே, நாங்கள் அதை எங்கள் மத்தியில் காணும் போது, எவ்வளவாய் நாங்கள் அதில் களிகூருகிறோம்; அதே குணாதிசயங்களைக் காண்கிறோம், அதே புகைப்படம் விஞ்ஞான ரீதியாக எடுக்கப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்களை வெளியே அழைத்து வாக்குத்தத்த தேசத்துக்குள் ளாகக் கொண்டு சென்ற அதே கர்த்தருடைய தூதனானவர், “மாம்சமாகி நம் மத்தியிலே வாசம் பண்ணினார்”. உன்னதத்துக்கு ஏறினார். அவர், “நான் தேவனி டத்திலிருந்து வந்தேன், தேவனிடத்திற்குப் போகிறேன்” என்று சொன்னார். சில மாதங்கள் கழித்து, இதோ அவர் அந்த தமஸ்குவுக்குப் போகிற வழியிலே, சவுலுடனே இருந்து, அவனை கீழே விழத்தள்ளினார். மேலும் சவுல் அதே அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டு, “கர்த்தாவே, நீர் யார்?” என்று கேட்டான். அவர் “நான் இயேசு, முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்” என்று கூறினார். ஓ, கர்த்தாவே, இரண்டாயிரம் வருடங்கள் கழித்து, அவர் மறுபடியும் இங்கே இருக்கிறதையும், விஞ்ஞானத்தினாலும், விசுவாசத்தினாலும் நிரூபிக்கப்பட்டு அவர் அன்று செய்த அதே செய்கைகளை இன்றும் சபையிலே செய்கிறதைக் காணுவது என்பது அதுவும் சரியாக இந்த நாளுக்கான வேதவாக்கியங்களை அடையாளங்காட்டும்படியாகக் கிரியை செய்வது எவ்வளவு அருமையாய் இருக்கிறது? கர்த்தாவே, இனி ஒருபோதும் நாங்கள் அவிசுவாசிக்கப் போவதில்லை. நாங்கள் விசுவாசிக்கிறோம். எங்கள் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். எங்கள் இருதயங்கள் கட்டவிழ்க்கப் படுவதாக. வியாதி தன் சக்தியை இழந்து போவதாக. இந்த விசுவாசிகள் தங்கள் கரங் களை ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ளனர். இப்பொழுதுதான் விசுவாச ஜெபமானது ஏறெடுக்கப்பட்டது. 'அது வியாதியஸ்தர்களை இரட்சித்து தேவன்தாமே இவர்களை எழுப்புவாராக.'' சாத்தானே, இந்த ஜனங்களை கட்டவிழ்த்துவிடு. தேவனுடைய மகிமைக்காக அவர்கள் வியாதியிலிருந்தும், பிணிகளிலிருந்தும் விடுதலையாகும்படியாய், அவர் களைப் போகவிடு என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். 81இப்போது உங்களை சாத்திக்கொண்டிருங்கள். அப்படியே ஜெபித்துக் கொண்டிருங்கள். உங்கள் சொந்த வழியில் ஜெபித்துக்கொண்டிருங்கள். உங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருங்கள், உங்கள் சொந்த வழியில் இப்போது “ஆண்டவராகிய தேவனே” என்று கூப்பிடுங்கள். நான் உங்களுக்காக ஜெபித்தேன். இப்போது நீங்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். அங்கே உங்கள் அருகே நிற்கிறவர் மேல் உங்கள் கைகளை வைத்து ''ஆண்டவரே, இந்தப் பெண்மணியை சுகமாக்கும், இந்த மனிதனை சுகமாக்கும். நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அவர்களுக்காக அதை உரிமை கோருகிறேன். அவர்கள் எனக்காக உரிமை கோருகிறார்கள். நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன்“ என்று கூறுங்கள். அதை விசுவாசியாதபடிக்கு அது ஏன் மரத்துப் போய் இருக்கவேண்டும். உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள். கர்த்தராகிய தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் முழுவதுமாக சுகமாக்குவாராக! இப்பொழுதே ஜெபித்து அதை விசுவாசியுங்கள். கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொரு வரையும் உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரைக்கும் முற்றிலும் சுகமாக்கு வாராக. ஆமென்.